(Reading time: 36 - 71 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

நான் இதை உண்மையில் பக்ஷண மூட்டை என்று தான் எண்ணினேன்; அதோடு தூக்கக் கலக்கத்தில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை; இந்த திருடன் சொல்கிறதைக் கேட்காதீர்கள்! இவன் தன் அம்மாளைத் தேடுவதாயும், அக்காளைத் தேடுவதாயும் பொய் சொல்லிக் கொண்டு நகைகளைத் திருடவே வந்திருக்கிறான்." என்றாள்.

   

இதற்குள் பொழுதும் விடிந்து விட்டது. கேசவனை நோக்கி போலீஸா கேசவனை நோக்கி "ஐயா! நீங்கள் தற்போது குற்றவாளி தான்" என்று பலவித சாக்ஷிகளுடன் நகையும் கையுமாகப் பிடிபட்டிருப்ப தால் நாங்கள் உம்மை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறோம். உங்களுடைய குற்றமற்றத் தன்மையை நீர் நிரூபிக்கும் பரியந்தம் நாங்கள் எங்கள் கடமைப்படிக்கு உம்மை ஜெயிலில்தான் வைத்திருப்போம். இந்த நகைகளின் மொத்த மதிப்பு ஆறாயிரம் ரூபாயிக்கு மேலிருக்கும். ஆகையினால் இது சாமானிய சில்லரைத் திருட்டல்ல! உம்மை நாங்கள் கைதியாக்கி விட்டோம்." என்று கூறி அவனுடைய வார்த்தையைச் சற்றும் எதிர் பார்க்காமல் அவனை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள்.

   

அந்தோ! மகா உத்தமனும், பரம சாதுவுமான கேசவனின் மனம் படும் பாட்டை நாம் விவரித்து எழுதுதல் சாத்யமாகுமா! கோபாக்கினி ° ஒருபுறம் கொழுந்துவிட்டு எரிகின்றது. "இது வேண்டுமென்றே யாரோ செய்த சதியாலோசனை தான்!'' என்பது நன்றாக விளங்கிவிட்டது. விசனம் தாங்காது அவன் மூர்ச்சையானான்; பின்னர் தெளிந்து எழுந்தான். "ஹா! கடவுளே! உன்னை நம்பிய எனக்கு இந்த தண்டனையையும் படாப்பழியையும் நீ கொடுப்பது தருமமா! ஐயோ! நான் ஒன்று நினைத்தால் நீயொன்று செய்து விட்டாயே! என் அன்னையைக் கண்டு களிக்கும் பேராநந்தத்துடன் என்னை வரச்செய்து தீராத ஆபத்துக்கு இலக்காக்கிவிட்டாயே! திருடன் என்கிற அவமானத்தை எனக்குப் பகுமானமாய்க் கொடுத்துவிட்டாயே! என் செய்வேன் சர்வேசா!" என்று முட்டிக் கொள்கிறான்.

   

போலீஸ் அதிகாரியை அழைத்து "ஐயா! நான் நிரபராதி, என்னை மோசமாக யாரோ வரவழைத்து இந்த கதிக்கு ஆளாக்கி இருக்கிறார்கள். ஆகையினால் இந்த அனியாய தகவலை என்னுடைய எஜமானருக்கு முதலில் தந்தி கொடுத்து வரவழைக்கவேண்டும். நான் நிரபராதி என்பதை நிரூபிக்காமல் தண்ணீரும் குடிப்ப தில்லை என்கிற விருதம் நான் எடுத்துக்கொள்ளப்போகிறேன். எனக்கு விவாகத்திற்கு நாள் வைத்திருக்கிறது.. இன்னும் 15 நாட்கள்தான் இருக்கின்றன. இத்தருணத்தில் வேண்டுமென்றே என்னை இக்கதிக்கு உள்ளாக்கும் நோக்கத்துடனேயே யாரோ செய்திருக்கிறார்கள். ஆகையினால் உடனே அவர் விலாசத்திற்குத் தந்தியடியுங்கள்; இந்த 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.