அவ்வாறு துணியை எடுக்கையில் அதனடியில் இருந்த ஒரு சிறிய மூட்டை பொத்தென்று கீழே விழுந்து, முடிச்சு அவிழ்ந்து அதனுள்ளிருந்த நகைகள் பிரகாசமாய்ச் சிதறின. அப்போது அருகிலிருந்தோர் அவைகளைக் கவணித்தது போலவே நமது கேசவனும் "இதென்ன நகைகள்!" என்று திடுக்கிட்டான். நகை களைக் கண்டதுதான் தாமதம், அருகிலிருந்தவர்கள் "ஆ! இதோ! இதோ! நகைகளுடன் கள்ளன் அகப்பட்டுக் கொண்டான்.'' என்று கூச்சலிட்டுக் கொண்டே கேசவனின் கையைப் பிடித்துக் கொண்டார்கள். உடனே எல்லோரும் அவ்விடத்தில் வந்து சூழ்ந்து கொண்டு, நகைகளையும் எடுத்து வைத்துக் கேசவனைக் கெட்டியாகப் பிடித்து வளைத்துக் கொண்டு "அடேப் திருட்டுப் பயலே! இப்போ தல்லவோ உன்னுடைய மோசம் தெரிகின்றது. "வேலைக்காரி இருக் கிறாளா!' என்று வேஷம் போட்டுக் கொண்டு பெரிய மனிதன் போல வந்து இத்தகைய வேலையைச் செய்ததுமல்லாமல், பரம யோக்யன் போன்று நிம்மதியாக இத்தனை நாழிகை பரியந்தம் படுத்துக் கொண்டிருந்து மெல்ல நழுவிவிட நினைத்தாயோ! அடேய் திருட் டுப் பயலே!" என்று கண்டபடிப் பேச வாரம்பித்தார்கள்.
ஒரு பாபமும் அறியாத நிரபராதியான கேசவன் தீயை மிதித்தவன் போலத் துள்ளினான். "ஹா! கடவுளே! இதென்ன சோதனை! ஒரு குற்றமும் மனத்தினாலும் எண்ணியறியாத எனது தலைமீது இவ்வித பேரிடி போன்ற அபாண்டத்தை இடித்து விட் டாயே!....ஐயா ! ....இதென்ன அக்ரமம்! நான் ஒரு பாபமும் அறிய மாட்டேன். இங்கு நான் உண்மையில் வேலைக்கார அம்மாளைக் காண்பதற்கு வந்தேன்.வந்த விடத்தில் அவர்கள் இல்லாமையினால் இங்கு படுத்துக் கொண்டேன். அதுதான் எனக்குத் தெரியும். மற்றபடி நான் ஒருவித குற்றமும் அறியேன். கடவுள்மீது ஆணை யாக நான் நிரபராதி. வீணே மனத்தைப் புண்படுத்தும் வார்த்தைகளைக் கூறாதீர்கள். இந்த நகைகளை யாரோ வேண்டுமென்று என் தலைமாட்டில் கொண்டு வைத்திருக்கிறார்கள்" என்று கூறினான்.
அது கேட்ட மற்றையோர், "போடா போக்கிரி நாயே! திருட்டுக் கழுதைகளெல்லாம் தான் தப்பித்துக் கொள்ளும் வழியைக் கூறாமல், நான் திருடினேன் என்று சொல்வார்களா! வேண்டு மென்று உன் தலைமாட்டில் நகையைத் திருடி வைத்தார்கள்!! சீச்சீ! திருட்டு நாயே! பாரும் கவனியாமல் மூட்டையை அமுக்கிக் கொண்டு போகும் எண்ணத்தோடு வெகு சாதுவைப் போல இத்தனை கூக்குரல் அமர்க்களத்திலும் வாய் திறவாது உறங்குகிறவன் போல நடித்ததை உன் மூட்டையே வெளியாக்கிவிட்டது. மூட்டையைக் கவனித்துவிட்டதால் நீ ஆணையும் செய்து