உபகாரமேனும் செய்யுங்கள்." என்று வேண்டினான்.
அந்த அதிகாரி அதற்கிசைந்து பொன்னுசாமிக்கு இவ்விஷயத்தைத் தந்தியடித்தார். பொன்னுசாமி பரிமளாவுக்கு விவாக பூஷணமாய்க் கொடுக்க வைர நெக்லேஸ் செய்வதற்கு வைரங்கள் பொறுக்கிக்கொண்டு இருக்கையில் இந்தத் தந்தி வந்தது, பொன்னுசாமி தந்தியை உடைத்துப் பார்த்ததும் தன்னையறியாது "ஹா! மோசம்!" என்று கத்திக்கொண்டே கல்லாய்ச் சமைந்தான்.
இந்த விபரீதமான செய்தியைக் கேட்ட வைரக்காரன் விசன முற்று வைரத்துடன் வீடு சேர்ந்தான். "ஐயோ! அனியாயமே! இங்குள்ள எதிரிகள் இங்கு வேலை செய்து பலிக்காமையினால் இவ்வித மோசமும் செய்துவிட்டார்களே! கேசவா! ஒண்டியாக அங்கு அகப்பட்டுக்கொண்டாயே! அன்னையைக் காண்பதாக அன்பு வலையை வீசி அதில் சிக்கவைத்து விட்டார்களே! இதைப் பரிமளா அறிந்தால் உயிர்துடிப்பாளே! ஐயோ! அனிபாயமே!" என்று பொன்னுசாமி தனக்குள் முட்டிக்கொண்டான். உடனே எழுந்து நாயுடுவுக்கு டெலிபோன் செய்து அவரை வரவழைத்தான்.
நாயுடுவும் வந்து இந்த விபரீதமான விஷயத்தைக் கேட்டு உள்ளம் துடித்தார்........"ஐயா! நான் ஊரிலில்லாத சமயம் பார்த்துத்தான் இந்த காரியத்தை எவனோ வேண்டுமென்று செய்திருக்கிறான். இதில் சற்றும் சந்தேகமே இல்லை. அக்கடிதமும் அவன் கையிலேதான் இருக்கின்றது. சரி; நாம் உடனே புறப்படுவோம். இவ்விஷயத்தை பரிமளாவுக்குத் தெரிவித்தால் மிக்க விசன மடைந்து தானும் வருவதாதத் தொந்தரவு செய்வாள். தெரிவிக்காவிடிலோ பத்திரிகையில் அறிந்து பரம வேதனையடைந்து நம்மையும் காணாமையினால் என்னவித மாறுதலை யடைந்துவிடுவாளோ! ஆகையினால் இதை அவளிடம் கூறித் தைரிய மொழிகள் சொல்லிவிட்டுத்தான் நாம் செல்லவேண்டும். ஆகையினால் வாருங்கள்; பரிமளாவின் வீட்டிற்குச் செல்வோம்" என்றார். உடனே இருவரும் பரிமளவல்லியின் வீட்டை அடைந்தார்கள்.
இந்த விபரீதமான விஷயத்தை யறியாத பரிமளா இருவரையும் சந்தோஷத்துடன் வரவேற்றான். பிறகு பொன்னுசாமியின் மனத்துயரத்தை முக மாறுதலினாலறிந்து கொண்ட பரிமளா "தந்தையே! இதென்ன முகம் ஏதோ ஒருவகையான மாறுதலடைந்திருக்கின்றது! அதோடு சுண்களும் நீரை உதிர்க்கின்றனவே! விஷயமென்ன?" என்று பரபரப்புடன் கேட்டாள்.
நாயுடு:- பரிமளா! நீ நல்ல புத்திசாலி; சாமர்த்தியசாலி. உனக்கு அதிகம் சொல்ல வேண்டியது எதுவுமே இல்லை: கடவுள் ஒரு மனிதரைப் பிறப்பிக்கின்றார்: அவ்வாறு பிறப்பித்தால்