அல்லவா!
(ஸோமேசன் கையில் தீபத்துடன் வருகிறான்.)
ஸோமே: (தனக்குள்) காற்றில் விளக்கு அணைந்து விடும் போல் இருக்கிறதே! இருளாய் இருக்கிறதென்று தீபத்தை எடுத்து வரப் போனேன். அதற்குள் கோமளா முன்னால் போய் விட்டாளே! (யாவரையும் பார்த்து விட்டு) யார் இவர்கள்? இங்கென்ன செய்கிறார்கள்? (உரக்க) கோமளா! கோமளா!
வீர : அடே யாரோ மனிதன் வந்து விட்டான்!
ஸோமே : ஆஹா! கோமளா! இதென்ன இது?
கோம : ஸோமேசரே! வாரும் வாரும்! இவர்கள் என்னை உபத்திரவிக்கிறார்கள்.
ஸோமே : யாரையா நீங்கள்? இதென்ன அநியாயம்? மாதவராயர் ஏழ்மை நிலைமைக்கு வந்து விட்டதினாலேயே அவரை இவ்விதம் அவமானப்படுத்தலாமா? இதென்ன அக்கிரமம்?
கோம : ஸோமேசரே! இதோ பாரும் என்னை இவர்கள் அவமானப்படுத்துகிறார்கள்.
ஸோமே : இது உனக்கு மட்டுமல்ல; எங்களையும் அவமானப்படுத்திய மாதிரி அல்லவா! இவர்களுக்கு எவ்வளவு துணிவு! நம்முடைய வீட்டு வாசலிலே இப்படி அக்கிரமமான காரியம் செய்யும் இவரைத் தக்கபடி தண்டிக்கா விட்டால் நமக்கென்ன யோக்கியதை இருக்கிறது. ஒரு நாய்கூடத் தன் கொட்டத்து அருகில் வருபவர் பேரில் குலைத்துக் கொண்டு போய் விழுகிறதே. பிராம்மணனாகிய நான் இதைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்பேனா! - (தன் கையில் இருந்த தடியை ஓங்கிக் கொண்டு) சே! நான் இதை ஒரு க்ஷணமும் சகிக்க மாட்டேன்! என்னுடைய அதிர்ஷ்டத்தைப் போலக் கோணிக் குறுகி இருக்கும் இந்தத் தடியால் இத்துஷ்டர்களின் மண்டையைச் சுக்கல் சுக்கலாய் உடைத்து எறிகிறேன் பார்.
ஸோமே : (தோழனைப் பார்த்துத் தனக்குள்) குற்றவாளி இவனல்ல. துன்பம் செய்பவன் அதோ நிற்கிறான். அடே துஷ்டா அந்தப் பெண்ணை விடுகிறாயா அல்லது ஒரே அடியில் உன்