Page 19 of 26
வீர : யாரால்?
ஸோமே : தலை விதியால்.
வீர : அப்படியானால் எழுத்திரு; பார்க்கலாம்.
ஸோமே : எழுந்திருக்கத்தான் பார்க்கிறோம்.
வீர : எப்பொழுது?
ஸோமே : நல்ல காலம் திரும்பி வரும் பொழுது.
வீர : அப்படியானால் அதுவரையில் அழு.
ஸோமே : அப்படித்தான் செய்கிறோம்.
வீர : எதற்காக அழுகிறீர்கள்?
ஸோமே : எங்களுடைய கால கதியை நினைத்து அழுகிறோம்.
வீர : அப்படியானால் சிரி முட்டாள்.
ஸோமே : அப்படியே ஆகட்டும்.
வீர: எப்பொழுது?
ஸோமே : மாதவராயர் திரும்பவும் தனவந்தராகும் பொழுது ஆகட்டும்.
வீர : அடே ஸபிண்டி போதும் வாயை மூடு எனக்கு கோபம் வரும் போல் இருக்கிறது. கடைசி