நாளும் இல்லை.
ஸோமே : அவர்கள் விஷயத்தில் நம்முடைய பொருட்களைச் செலவழித்தது போதாதென்று இவ்விதம் நம்முடைய பொழுதையும் அவர்களைப் பற்றி நினைப்பதில் வீணாக்குவானேன். கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்காகுமோ? தினந் தினம் இதைப் பற்றி ஓயாமல் வருந்தி மனத்தை ஏன் வதைத்துக் கொள்ளுகிறீர்கள்?
மாத : ஆஹா என்ன செய்வேன்?
(சிவலோக நாதனைக்கண்டு' என்ற பட்டின் வர்ணமெட்டு)
செஞ்சுருட்டி – ரூபகம்
ப. இதுவோ நின் சோதனை?
இன்னம் ஏன் இக்கொடுமை? ஈசா!
அ. விதிவயம் இதுவாமோ? - பவ
விதைகள் அளித்த பயனாகுமோ? (இது)
ச. பணமே தெய்வம் பாழுமுலகில்; பாதகங்களைச் செய்யும்;
பிணமே தனமில்லாமல், ஏனோ பிறந்தே னில்லாதவன். (இது)
2. இல்லான் முகமில்லான் முதல் எவரும் விரும்பிப்பாரார்;
சொல்லார் மொழி; விலகி நடப்பார்,
பொல்லாத விஷமெனவே வெறுப்பர். (இது)