(Reading time: 29 - 58 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

கொண்டிருக்கும் அவரை வேறு எவ்விதமாய் மதிப்பது அவ்வளவு மேன்மை பொருந்தியவர்

   

யாரப்பா?.

   

வஸ : ஆம் அவர் பெயரைக் கேட்க வேண்டும் என்று எனக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. தெரிவி.

   

மகி : அம்மா அவர் தன்னுடைய தயாள குணத்தினாலும் ஈகையினாலும்...

   

வஸ : தன்னுடைய தனத்தை எல்லாம் செலவு செய்து விட்டாரோ!

   

மகி : அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது. நான் இன்னம் சொல்லவில்லையே!

   

வஸ : அதைச் சொல்லவும் வேண்டுமா செல்வமும் நற்குணமும் ஒன்றாய்க் கூடி இருப்பது அபூர்வமல்லவோ. உலோபிகளிடத்திலேயே பொருள் யாவும் நிறைந்திருப்பது உலக வழக்கம். சாக்கடைக் குழியில் தானே அருந்துவதற்கு அருகமற்ற ஜலம் உச்சி விளிம்பு வரையில் நிறைந்திருக்கும்.

   

மல்லி : அவருடைய பெயரைத் தெரிவி.

   

மகி : குளிர்ந்த முகத்தை உடையவராதலால் பூலோக சந்திர னென்று யாவரும் அவரை அழைக்கிறார்கள். அவர் பெயர் மாதவராயர்.

   

வஸ : (திடுக்கிட்டுத்தன் ஆசனத்தை விட்டெழுந்துஅடி! மல்லிகா! இவருக்கு ஆசனம் கொண்டு வந்து போடு. ஐயா இது உம்முடைய வீடு; தயவு செய்து உட்கார்ந்து கொள்ளும். அடி மல்லிகா விசிறி கொண்டு வா அந்தச் சரீரத்தைத் தொட்டு வருடும் பாக்கியத்தை உடைய இவர் எவ்வளவோ தவம் செய்திருத்தல் வேண்டும்! இவருடைய பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்! விசிறியால் வீசு! அபூர்வமாக வந்த நம்முடைய விருந்தினர் களைத்துப் போயிருக்கிறார்.

   

மகி : ஆகா! மாதவராயருடைய பெயரைச் சொன்னதற்கு இவ்வளவு மரியாதையா! மெச்சினேன் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.