(Reading time: 29 - 58 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

முண் : ஆகா! சந்தோசம்! அப்படியானா ரோக்கியந்தான்! அவன்மேலே எங்கிளுக்கு ஒரு கோவமுமில்லெ! எப்போ ஓணாமின்னாலும் இனிமேலே வந்து சூதாடட்டும். அடே! வாடா போவோம்.

   

திண் : அடே இவன் எம்புட்டு அளவான பணக்காரக் குட்டியை சம்பாறிச்சுக் கிட்டான் பாத்தியாடா இவ மேலே நவெ ஜிலுஜிலுன்னு மின்னுதுடா

   

(போகிறார்கள்)

   

(மல்லிகா உள்ளே வருகிறாள்)

   

மல்லி : அம்மா அவர்கள் காப்பை வாங்கிக் கொண்டு சந்தோஷமாய்ப் போய்விட்டார்கள்.

   

வஸ : ஐயா! நண்பரே! நீர் திரும்பி வராததைப் பற்றி உம்முடைய மனைவி மக்கள் வருந்தியிருப்பார்கள். சீக்கிரம் போய் அவர்களுடைய ஆவலை நீக்கும்.

   

மகி : அம்மணி எனக்கு மனைவி ஏது? பிள்ளை ஏது? ஒன்றுமில்லை நான் ஏகாங்கி. நீங்கள் செய்த இந்த உதவியை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். ஈசுவரன் உங்களைக்

   

காப்பாற்றுவான். உத்தரவு பெற்றுக் கொள்கிறேன். (போகிறான்)

   

(வெளியில் வந்து தனக்குள்)

   

ஆகா! இந்தத் தொழில் எவ்வளவு மானக் கேட்டையும் துன்பத்தையும் கொடுத்தது. சே! இப்படித் திக்கில்லாமல் அலைவதை விடப் பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பதே நல்லது. என்ன உலகம்! நாணயமாய் வேலை செய்து இந்த ஒரு வயிற்றை வளர்ப்பதற்கு இந்த ஊரில் ஒரு வேலை அகப்படாமற் போய் விட்டதே! இவ்வளவு திடமான சரீரத்தை வைத்துக் கொண்டு நான் பிச்சை எடுக்கப் போனால் எவன் ஒரு பிடி சோறு போடுவான் தடியை எடுத்து வந்து மண் டையை உடைத்து அனுப்புவான். நல்லது! நான் இப்பொழுது காஷாயம் முதலியவற்றைப் பெற்றுச் சந்நியாசியாகிறேன். அதைவிடக் குறைந்த மனக்கவலை உடைய நிலைமை பூமியில் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.