(Reading time: 19 - 38 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

எவருக்கு உண்டாகும் நற்குணவதியாகிய நீ, நீடுழி இன்பம் அனுபவித்து வாழ அந்த ஈசுவரன் அனுக்கிரகிப்பானாக! மாதே நான் இதுவரையில் பிறருக்குக் கொடுத்தறிவேனே யொழிய எவரிடத்தும் வாங்கி அறியேன். எப்பொருளையும் நாம் நியாயமான வழியில் சம்பாதித்துச் செலவு செய்தல் வேண்டுமே ஒழிய அன்னியருடைய செல்வத்தை நாம் இப்படிக் கவருதல் திருட்டாகும். ஆகா! நல்ல காரியம் செய்யச் சொல்லுகிறாய்! என்னிடத்தில் அந்தரங்க அபிமானம் வைத்தவளாய்க் காணப்படும் நீ எனக்கு இவ்விதமான தீங்கை நினைக்கலாமா? நீ எனக்கு உதவி செய்வதாய் வாயினால் சொன்ன அந்த அன்பான மொழியும், நினைத்த நல்ல நினைவுமே போதும். நான் அவற்றை அடைந்து தனிகனானதிலும் அதிகம் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

   

வஸ : ஸ்வாமி என்னை அன்னியளாகப் பாவிக்கக் கூடாது! நான் சதா காலமும் இடைவிடாமல் தங்கள் உருவத்தையே என் மனதில் வைத்து அதையே தெய்வமாக மதித்து வழிபட்டுத் தங்களைப் பற்றி மனனஞ் செய்வதையே பேரின்பமாய் மதித்து வருகிறேன். தங்களைப் பார்த்துத் தங்கள் மேன்மையைப் பற்றி உணர்ந்த பின் இந்தச் சரீரத்தைத் தங்களுக்கென்றே அர்ப்பணம் செய்து விட்டேன். ஆகையால் என்னை அங்கீகரித்துத் தங்களுக்குப் பணி புரிபவளாய் வைத்துக் கொண்டு என்னை ஈடேற்ற வேண் டும். தங்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம் தங்களிடத்தில் சென்ற மனது இனி வேறு யாரிடத்திலும் இந்த உயிரழிவதாய் இருந்தாலும் செல்லாது. என்னுடைய ஏராளமான செல்வத்தையும் என்னுடைய ஸ்ரீதனமாக ஏற்றுக் கொண்டு இனித் தாங்கள் துன்பத்தையும், மனக் கவலையும் நீக்கி இன்புற்று வாழலாம்.

   

மாத : என்ன ஆச்சரியம்! இது எங்கும் நடக்காத விந்தையாய் இருக்கிறதே! பரம தரித்திரனாகிய என்னைக் குல ஸ்திரீயும் மணக்க இச்சைப்பட மாட்டாளே. அப்படி இருக்கப் பணத்திலேயே கண்ணுங் கருத்துமாய் உள்ள தாஸி குலத்தில் உதித்த நீ விரும்புவது நம்பத் தகுந்ததாய் இல்லையே! உன்னுடைய பேரழகைக் கண்டு மயங்கி உன்மீது ஆசை கொண்டு எத்தனையோ தனவந்தர்கள் உன் மாளிகையின் வாசலில் உனது தயவிற்காகக் காத்திருப்பார்களே! அரசன் மைத்துனன் என்றால் நகரமே நடுங்கும். அவனையும் அவமதிக்கிறாய்! இதென்ன வினோதம்! இவ்வளவு மேன்மைகளை அலட்சியம் செய்து விட்டு என்னை நாடுவதின் காரணமென்ன? இது கனவோ? அல்லது நினைவு தானோ? இப்படியும் நடக்குமோ? இதுவரையில் நீ என்னிடத்தில் உண்மையாய்ப் பேசியதாக நினைத்தேன். இப்பொழுதே அதை உள்ளபடி அறிந்தேன். நான் தரித்திரன் என்று நீயும் என்னை ஹேளனம் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.