என்னவென்று விவரிப்பேன் என் உயிர் இப்பொழுதே போய் விடும் போல் இருக்கிறது! என் ஆருயிர் நாதா! உன் இச்சைப் படி ஆகட்டும் என்று தங்கள் இனிய வாயால் ஒரு மொழி கூறி என்னை இந்த இடர்க் கடலில் இருந்து கை தூக்கி விடக் கூடாதா? ஏழையின் முகத்தைப் பாருங்கள். பிரபு தங்களையே எண்ணி எண்ணிப் புண்ணான என் மனதை ஏற்றுக் கொண்டேன் என்னும் அந்த மொழி அமுதைச் சொரிந்து உய்விக்கக் கூடாதா? இதோ தங்களை ஆயிரம் தடவை சேவித்து வணங்குகிறேன்.
மாத: ஹா. ஈசுவரா கருணாநிதி! இதுவும் உன் சோதனையோ? கற்பிற்கு அரசியாகிய என் பிராண சுந்தரியின் மனதை வருத்த நினைப்பேனோ? இவள் படும் பாட்டைக் காண என் மனம் தத்தளிக்கிறதே என்ன செய்வேன்: ஹா. ஜெகதீசா! (மூர்ச்சித்து விழுகிறார்)
வஸ : (துடிதுடித்து) ஐயோ! என்ன சம்பவித்ததோ தெரிய வில்லையே என் துரை மூர்ச்சித்து விழுந்து விட்டாரே! ஓய் ஸோமேசரே! அடி தோழி! சீக்கிரம் வாருங்கள் (கையைப் பிசைந்து கொண்டு) சீக்கிரம் வாருங்கள் நமது எஜமானர் மயங்கி விழுந்து விட்டார். (யாவரும் ஓடி வருகிறார்கள்)
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...