போகும் நிலைமையில் நித்திய தரித்திரனாய் இருந்து வாழ்வதும் ஒரு வாழ்வாமோ! இறகுகளை இழந்த பறவைகளும், இலைகளை உதிர்த்த மரங்களும், இடிந்த வீடும், பிறருக்குக் குதுகலமாக விருந்தளிக்கும் நிலைமையில் இல்லாத தரித்திரனுக்கு சமானமானவை.
ஸோமே : அம்மா நகைகள் களவு போன போது இவற்றை என் அங்கவஸ்திரத்தில் மூட்டைக் கட்டி வைத்திருந்தேன். தயவு செய்து என் வஸ்திரத்தைக் கொடுத்து விடுங்கள்.
வஸ : (புன்சிரிப்போடு) ஒரு வஸ்திரந்தானா வேண்டும். ஒன்பது வஸ்திரங்கள் தருகிறேன்! (வஸந்தஸேனை தோழியைப் பார்த்துக் கண் ஜாடை காட்ட ஸோமேஸனை அழைத்துக் கொண்டு மறைவாகப் போய் விடுகிறாள்)
வஸ: ஸ்வாமி நகை மூட்டை திருட்டுப் போயிருக்க அதற்குப் பதிலாக வேறொன்றை ஏன் அனுப்ப வேண்டும்? அப்படிச் செய்வது அனாவசியமல்லவா?
மாத :விருத்தம்: செஞ்சுருட்டி
மங்கையே! நன்மை மிக்க மானினி அவனி தன்னில்
மங்கிய வறியன் சொல்லை மதிப்பவ ருளரோ? முற்றும்
சங்கையே யடைவர் வாய்மை சாற்றினும் பொய்யா மின்னம்
பங்கமே புரிவா ரெள்கிப் பதரெனக் கொள்வ ரன்னோர்!
ஸ்திரீ ரத்னமே! இதை நான் அனுப்பாவிட்டால் என்னை இனி யார் மதிப்பார்கள்? திருட்டுப் போய்விட்டதென்று நான் சொன்னால் அதை யாராவது நம்புவார்களா? ஏழையின் சொல் அம்பலம் ஏறுமா? தனம் இருந்தால் மாத்திரம் மனிதனுக்குக் கெளரவமே ஒழிய, பொருளில்லாதவனுக்குப் புகழும் இல்லை மதிப்புமில்லையே! அவன் உண்மையைச் சொன்ன போதிலும், அது பொய்யாகவே தோன்றுமே!