(Reading time: 17 - 33 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

   

வஸ : அவர் என்மீது ஒருகாலும் வருத்தப்பட மாட்டார். நான் சொல்வதைச் சொல். .

   

தோழி : ஆக்ஞை! (போய்த் திரும்பி வருகிறாள்)

   

தோழி: அம்மணி ஸரத்தை வாங்கிக் கொள்ளவே மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். தான் தன் கணவனையும் கற்பையுமே ஆபரணங்களாக மதிப்பதாகவும், இதைப் பற்றிச் சிறிதும் கவலைப் படவில்லை என்றும் சொல்லித் தடுத்தார்கள் நான் வற்புறுத்திக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். அதோ பார்த்தீர்களா நம்முடைய எஜமானரின் குழந்தை வருகிறார்!

   

(சிசுபாலன் என்னும் குழந்தை விசனத்துடன் வருகிறான். கோமளா ஒரு மண் வண்டியை இழுத்துக் கொண்டு வருகிறாள்)

   

கோம : குழந்தாய்! வண்டியில் உட்கார்ந்து கொள் நான் இழுக்கிறேன்.

   

குழந்தை : (கோபத்துடன்) எனக்கு இந்த வண்டி வேண்டாம் போ! அடுத்த வீட்டு வாஸுதேவன் பொன் வண்டி வைத்திருக்கிறான் எனக்கு மாத்திரம் மண் வண்டியோ! எனக்கு வேண்டாம் போ. (அழுகிறான்)

   

கோம : குழந்தை! அழாதே அப்பா! அடுத்த வீட்டுக்காரன் கோடீசுவரன். அவனுக்கு பொன் நிறைய இருக்கிறது. பொன் வண்டி செய்து கொடுத்திருக்கிறான். பொன்னுக்கு நாம் எங்கே போகிறது? உன்னுடைய தந்தை மறுபடியும் தனவந்தராகும் வரையில் பொறுத்துக் கொள். உடனே உனக்கும் பொன் வண்டி வாங்கிக் கொடுப்பார். அழாதே! வேண்டாம்! அதோ பார்; அங்கே யார் நிற்கிறார்கள் பார் அவர்களை உனக்குத் தெரியுமா?

   

குழ : (கோபத்தோடு) நான் பார்க்க மாட்டேன் போ.

   

வஸ : ஆகா! என்ன அழகு! யாரே அழகுக்கு அழகு செய்வார்? சரியான ஆடை ஆபரணங்கள் ஒன்றும் இல்லா விட்டா லும் இவனுடைய இயற்கை அழகும் முகவசீகரமும் யாருக்கு வரும்? (கைகளை நீட்டி) கண்ணே! இங்கே வா! (எடுத்து மடி யில் வைத்துக் கொண்டு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.