(வஸந்தஸேனை கதவை மூடிக் கொள்ள, கோமளா வீட்டிற்குள் போய் விடுகிறாள்.)
(பத்மநாபன் திரும்பி வருகிறான்)
(தனக்குள்) அப்பா இந்த வெற்றிலை போடா விட்டால் என் பாடு ஆபத்தாய் விடுகிறது! நான் கடைக்குப் போனதினால் கால தாமஸமாய் விட்டது. எஜமான் கோபித்துக் கொண்டு அடிக்க வருவான்; வேகமாய் ஓட்டலாம். (வண்டியில் ஏறிக் கொள்கிறான்)
(அந்த சமயத்தில் ஒருவன் அடியில் வருமாறு பறை சாற்றுகிறான்)
”துடும், துடும், துடும், துடும். சிறைச் சாலையில் விலங்கிடப் பட்டிருந்த பிரதாபன் என்னும் இடையன் காவற்காரனைக் கொன்று விட்டுத் தப்பி வெளியில் ஓடி வந்தவன் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறான். அவனைக் காண்போர் உடனே பிடித்து, அரசனிடம் ஒப்புவித்தல் வேண்டியது. அப்படிச் செய்பவர்களுக்குப் பெருத்த வெகுமதி அளிக்கப்படும். துடும், துடும், துடும், துடும்.”
பத்ம : (தனக்குள் இங்கு என்னமோ பெருத்த குழப்பமாய் இருக்கிறது. இந்தப் பறையின் சத்தத்தைக் கேட்டு எருதுகள் பயந்து துடிக்கின்றன. நான் வேகமாய் வெளியில் போய் விடுவதே நல்லதே.
(வண்டியை ஓட்டிக் கொண்டு போய் விடுகிறான்)
(அறுபட்ட சங்கிலியுடன் பிரதாபன் ஓடி வருகிறான்)
பிரதா : (தனக்குள்) அப்பா இந்தச் சங்கிலியுடன் ஓடி வருவது எவ்வளவு கடினமாக இருக்கிறது! கொடுங்கோல் மன்னனாகிய இந்த அரசனுடைய சிறைச் சாலையில் இருந்து என்னை அந்தச் சசிமுகனே விடுத்தான்! அவன் அல்லவோ உண்மையான நண்பன்! இவ்வித அக்கிரமம் எந்தத் தேசத்தில் நடக்கும் எவனோ ஒரு ஜோஸியன் நான் அரசனாகப் போகிறேன் என்று சொல்லி விட்டானாம்! அதற்காக என்னைச் சிறையில் அடைத்து விடுவதாம்! நன்றாய் இருக்கிறது ஜோஸியன் சொல்லி விட்டால் அதற்கு நான் என்ன செய்வேன்? இது என் பேரில் எப்படி