வீர : (அடிக்கிறான்) போக்கிரி மறுத்து மறுத்துப் பேசுகிறாயா? உனக்கு அவ்வளவு துணிபா
பத்ம : என்னை அடித்தாலும் சரி! கொன்றாலும் சரி! செய்யத் தகாத காரியத்தை நான் ஒருக்காலும் செய்ய மாட்டேன்.
வஸ (தோமுனைப் பார்த்து) ஐயா! இந்த ஆபத்தில் நீர் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும். (வணங்குகிறாள்)
தோழ : மகாப் பிரபு கோபிக்க வேண்டாம். பத்மநாபன் சொல்வது சரியான விஷயம். எவ்வளவோ புண்ணியம் செய்து பெற்ற இந்த மேன்மையை ஏன் இழக்கப் பார்க்கிறீர்கள்?
வீர : (தனக்குள்) இந்த இரண்டு கழுதைகளும் இதைச் செய்ய அஞ்சிப் பின் வாங்குகிறார்கள். இராஜாவின் மைத்துனனாகிய என்னை எதிர்காலம் என்ன செய்யப் போகிறது. (கோபத்தோடு)
அட பத்மநாபா! என் முன்பாக நிற்காதே போ அப்பால்! (உதைக்கிறான்)
பத்ம : இதோ போய் விடேன். (அப்பால் போகிறான்)
வீர : (தன் அங்க வஸ்திரத்தை இறுகக் கட்டிக் கொண்டு) அடி வஸந்தஸேனை! வா இப்படி; விடு உன் பிராணனை: (அவளைப் பிடிக்கப் போகிறான். தோழன் அவனைத் தடுக்கும் பொருட்டு பிடிக்கிறான்; அவன் கீழே விழுகிறான்).
வீர : (எழுந்து) அடே! துஷ்டா! உன் எஜமானைக் கொல்லவா நினைக்கிறாய்? இவ்வளவு காலம் என்னுடைய அன்னத்தைத் தின்று வளர்ந்த நீ எனக்கு விரோதமாக நடக்கிறாய் அல்லவா?
(தனக்குள்)இவன் இருந்தால் காரியம் முடியாது. இவனையும் அனுப்பி விடுகிறேன். - அடே பைத்தியக்காரா நான் சொன்னது இன்னதென்பதை நீ சரியாக உணரவில்லையே! இதுதானா உன்னுடைய புத்திசாலித்தனம் இவ்வளவு உயர்ந்த குலத்தில் பிறந்த நான் கேவலம் இந்த இழிவான காரியத்தைச் செய்ய உண்மையில் விரும்புவேனோ என்பதை அறிந்து கொள்ளக் கூடவில்லையே! இவள் பயந்து கொண்டு என் இச்சைக்கு இணங்கட்டும் என்று இப்படிச்