அதிகமாய் விசேஷித்தா பேசுகிறாய்? உனக்கு இவ்வளவு அகம்பாவமா? அவன் பேரில் உனக்கு அவ்வளவு ஆசையா?
வஸ : என் ஹிருதயத்திலேயே குடியிருக்கும் அவரை நான் எப்படி மறப்பேன்?
வீர: நீ சொல்வது நிஜந்தானா சமீபத்தில் வா. உன்னுடைய ஹிருதயத்தில் அவன் இருக்கிறானா என்று பார்க்கிறேன். அடி! வஸந்தஸேனை! பிச்சை எடுக்கும் பிராம்மணனுடைய பிரிய சகியல்லவோ நீ!
வஸ : ஆகா! கர்னாமிருதமான மொழிகள்! என்னுடைய பெருமையே பெருமை! அவரைப் பற்றி நீர் பேசப் பேச என் மனதில் பிரம்மானந்தம் உண்டாகிறது. இன்னம் பேசலாம்.
வீர: அவனால் இந்த சமயத்தில் உன்னை பாதுகாக்க முடியவில்லை. அப்பேடியை நீ மிகவும் புகழ்ந்து பேசுகிறாயே!
வஸ : அவர் இங்கிருந்தால் எனக்கு இந்த அவமானம் நேர அவர் பார்த்துக் கொண்டிருப்பாரா? எனக்கு மாத்திரமல்ல; இன்னும் யாராயிருந்த போதிலும், அநாதைகளுக்குத் தீங்கு சம்பவித்தால் தன் உயிரைக் கொடுத்தாயினும் அவர்களைக் காப்பாற்றுவாரே!
வீர : ஆகா! அவன் அவ்வளவு பலசாலியா! அவனல்ல அவன் பாட்டன் வந்த போதிலும் உன்னைத் தப்புவிக்க முடியாது. பாஞ்சாலியை இராமர் பிடித்ததைப் போல இதோ உன்னை நான் பிடித்துக் கொல்லுகிறேன் பார்.
(அவளுடைய கழுத்தைப் பிடித்துக் கொள்ளுகிறான்)
வஸ : ஐயோ! இங்கு ஒருவருமில்லையா? இங்கு அநாதையாகத் தவிக்கிறேனே! இந்தக் கொலை பாதகன் என்னை ஹிம்சிக்கிறானே! ஹே! பிராண துரையே! நீர் எங்கிருக்கிறீரோ தெரியவில்லையே! என்னுடைய மனோரதம் இன்னம் நிறைவேறவில்லையே; இதற்குள் என்னுடைய உயிர் போய் விடும் போல் இருக்கிறதே ஒரு நாளாயினும் உம்மோடு கூடி வாழவில்லையே! இப்பொழுது இறந்தால் என் மனம் வேகுமோ ஹே! சுந்தராங்கா! இங்கு வர மாட்டீரா! இந்தக் கொலை பாதகனுக்குத் தக்க சிட்சை விதிக்க மாட்டீரா! ஏ, பக்ஷிகளா! ஏ,