(Reading time: 28 - 56 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

வீர : உன் தலை, என் கால், சாட்சியாகச் சொல்லுகிறேன். நீ கவலைப்பட வேண்டாம். உனக்குப் பயமென்பதே தேவை இல்லை. நான் அவளை அனுப்பி விட்டேன்.

   

தோழ : எங்கே அனுப்பினர்கள்?

   

வீர : அவள் இந்த உலகத்தையே விட்டுப் போய் விட்டாள்.

   

தோழ: இதென்ன ஆச்சரியம்!

   

வீர: ஆச்சரியம் ஒன்றுமில்லை. இச்சருகின் கீழ் சயனித்துக் கொண்டிருக்கிறாள் பார். (பிரித்துக் காட்டுகிறான்)

   

தோழ : ஆகா! என்ன அக்கிரமம் (மூர்ச்சித்து விழுகிறான்)

   

வீர : இதென்ன! இவனும் இறந்து விட்டானா என்ன? அவளிடத்தில் இவனுக்கென்ன இவ்வளவு பிரியம்? இவர்கள் இருவருக்கும் ஒரு வேளை ஸ்நேகம் இருக்குமோ? ஆம், ஆம்! அப்படித்தான் இருக்க வேண்டும்.

   

பத்ம : (தோழனைப் பார்த்து) ஐயா! எழுந்திரும்! இத்தனைக்கும் நானே காரணம்! இவளை நான் அல்லவோ இங்கு அழைத்து வந்தேன். இந்தப் பழி எனக்கு அல்லவோ வந்து சேரும்.

   

தோழ :(மிகவும் விசனத்து) ஐயோ வஸந்தஸேனா! அன்பாகிய ஆறு வறண்டு போய் விட்டதோ? அழகானது, இந்தத் தேசத்தை விட்டுத் தனது இருப்பிடத்திற்குப் பறந்து போய் விட்டதோ? ஆகா! என்ன சாந்த குணம் என்ன குதூகலமான மொழி குழந்தையைப் போல் விளையாடுவாயே! இன்பங்களே நிறைந்த பெட்டியைத் திருடன் உடைத்து விட்டானே! இந்தப் பழி வீண் போகுமோ? ஸ்திரீ ஹத்தி தோஷம் விலகுமோ? அழகான யெளவன ஸ்திரீயை யாதொரு குற்றமும் இன்றி கொல்வது என்றால், தெய்வம் இந்த ஊரில் இருக்குமோ? தலையில் இடி விழாதோ? (தனக்குள் இந்தக் கொலை பாதகன் இந்தக் குற்றத்தை என் பேரில் சுமத்தினாலும் சுமத்துவான். இங்கிருப்பது பிசகு, நான் போய் விடுகிறேன். (விரசேனன் அவனைப் பிடித்துக் கொள்ளுகிறான்) என்னை ஏன் தடுக்கிறீர்! உம்முடன் நான் தோழனாக 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.