(Reading time: 17 - 34 minutes)
Love

 " டாக்டர் கமலாவை பார்க்க அபாயிண்ட்மெண்ட்........"

 " அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை காலை பத்துமணிக்கு தரட்டுமா?"

 " அடுத்த வாரமா? ஏன்?"

 " டாக்டர் ஊரில் இல்லை, அடுத்த வாரம்தான் வருவார், ஏற்கெனவே நிறையபேர் அபாயிண்ட்மெண்ட் வாங்கிவிட்டதாலே, உங்களுக்கு வெள்ளிக்கிழமை காலை பத்துமணிக்குமேல்தான் கிடைக்கும், அன்று உங்களுக்கு வர முடியவில்லைன்னா, அடுத்தநாளில் போடறேன்......."

 பெருத்த ஏமாற்றத்துடன் பூஜா ரிசப்ஷனில் நிற்பதைப் பார்த்த ராஜா அவளை நெருங்கி வந்து " என்னாச்சு?" எனக் கேட்டான், எதுவுமே தெரியாத அப்பாவியாக!

 உதட்டைப் பிதுக்கியவாறு, பூஜா அவனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

 " டாக்டரைப் பார்க்க இன்னும் பத்து நாளாகுமாம்! என்ன பண்ணலாம்?"

 " ஏன்? என்னாச்சு? அவ்வளவுபேரா வெயிட்டிங்?"

 " டாக்டர் ஊரிலே இல்லையாம், அடுத்த வாரம்தான் வராங்களாம், சரி, வாங்க, வீட்டுக்கு திரும்பிப் போய் யோசிப்போம்............"

 ராஜா ஸ்கூட்டரில் பூஜாவை ஏற்றிக்கொண்டு வீடு திரும்பும்போது, அவளிடம் பேச்சு கொடுத்தான்.

 " பூஜா! இன்று முழுவதும் ஜாலியா ஊர் சுற்றுவோம், லஞ்ச், டின்னர் எல்லாம் ஓட்டலிலே, ஈவினிங் சினிமா,எல்லாம் முடிச்சிண்டு வீட்டுக்குப் போய் படுக்கையில் விழுவோம், சரியா........?"

 பூஜா ஏதோ யோசனையில் இருந்ததால், பதில் தரவில்லை!

 மௌனத்தை சம்மதமாக எடுத்துக்கொண்டு, ராஜா நேரே பூஜாவின் அக்காவின் வீட்டுவாசலில் நிறுத்தினான்.

 " வாட் எ சர்பிரைஸ்! போன்கூட பண்ணாம, திடுதிப்புனு வந்திருக்கீங்க, வாங்க, வாங்க!"

 உற்சாகமான வரவேற்பை ஏற்றுக்கொண்டு பூஜா தன் அக்காவை அணைத்துக் கொண்டாள்.

 " அக்கா! டாக்டரைப் பார்க்கப் போனோம். அவர் ஊரில் இல்லே, உன் வீடு பக்கத்திலே இருக்கிறதனாலே, உன்னை பார்த்துட்டுப் போகவந்தோம்........"

 " ரொம்ப சந்தோஷம்! நானே உனக்கு போன் பண்ணி வரச் சொல்லணும்னு இருந்தேன், ஒரு நல்ல சமாசாரம் சொல்ல; உன் காலேஜ் மேட் கற்பகம் உனக்கு இரண்டு வருஷம் முன்பே கல்யாணம் பண்ணிண்டவ, நேற்று வந்திருந்தா......நான்கு மாசம் கர்ப்பமாயிருக்கா........அவதான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.