(Reading time: 17 - 34 minutes)
Love

இந்த இறுக்கமான சூழ்நிலையை மாற்ற என்ன செய்யலாம் என யோசித்தான். 

 " அக்கா! பூஜா அழும்போதுகூட அழகாயிருக்காயில்லே? ஏன்னா, அவள் இன்னமும் குழந்தையாகவே இருக்கிறாள். இந்தக் குழந்தையை, ஒரு தாயா, நீங்கதான் சிரிக்கவைக்கணும். கிசுகிசு மூட்டிப் பார்க்கலாமா?"

 என பூஜாவின் இடுப்பில் கை வைத்தான். 

 " ச்சீ போடா! வெட்கமில்லாம விளையாடாதே!"

 என்று அவன் கைகளை தட்டிவிட்டுக்கொண்டே, சிரித்தாள் பூஜா!

 " அக்கா! உங்க அருமை தங்கை சிரிச்சுட்டா, வாங்க! ஓட்டலுக்குப் போய் ஒரு வெட்டு வெட்டலாம்! என் ஸ்கூட்டரை இங்கேயே விட்டுவிட்டு, ஓலாவிலே போகலாம் ஓட்டலுக்கு மூணு பேருமா!"

 " ராஜா! அவசரப்படாதே! பூஜா முகம் கழுவிக்கொண்டபிறகு, கிளம்புவோம்!"

 " ஆமாமாம்! குழந்தை அழுது கன்னத்திலே கறை படிஞ்சிருக்கு! பூஜா! டேக் யுவர் ஓன் டைம்! அவசரமில்லே, சோப் போட்டு வாஷ் பண்ணிண்டு பவுடர் போட்டுக்கொண்டு தேவதையா வந்து நில்லு, எங்க முன்பு!"

 " ரெண்டுபேரும் சேர்ந்து என்னை கலாய்க்கிறீங்களா? யானைக்கொரு காலம் வந்தா, பூனைக்கும் ஒரு காலம் வரும்! அப்ப பார்த்துக்கிறேன்........"

 பேசிக்கொண்டே பூஜா உள்ளே செல்ல, அவள் அக்கா ராஜாவுடன் பேச்சை தொடர்ந்தாள்.

 " ராஜா! உன்னை நினைத்தால், பரிதாபமாயிருக்கு! நீ உன் துயரத்தை மனசிலே போட்டு புதைச்சிண்டு பூஜாவையும் சமாளிக்கிற நெருக்கடியை நினைத்தால், பாவமாயிருக்கு!"

 " அக்கா! எனக்கு மனசிலே எந்த துக்கமும் இல்லே, எதுக்கு துக்கம்? குழந்தை இல்லேன்னா? அக்கா! சில வியாபாரிங்க, ஒரு கோடி ரூபாய் லாபம் வந்தாலும், சந்தோஷப்படாம வருத்தமாயிருப்பாங்க! காரணம் கேட்டால், ஒரு கோடியே இருபது லட்சம் வரவேண்டியதிலே, ஒரு கோடிதானே வந்திருக்கு, இருபது லட்சம் வரலையேன்னு வருத்தப்படுவான். அதுபோல இல்லை நான்! நல்ல வசதியான வாழ்க்கை! அழகான மனைவி! நல்ல உத்தியோகம்! பட்டப் படிப்பு! அப்பா, அம்மா, கூடப் பிறந்தவங்க, அதேபோல என் மனைவியின் பாசமான பெரிய குடும்பம் எல்லாம் உள்ளதை நினைத்து சந்தோஷப்படவே நேரம் போதாது! 

 அக்கா! இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்றேன், நான் கோவிலுக்குப் போகிற வழக்கம் இல்லாதவன்தான்! ஆஷாடபூதி பக்திமானாக வேஷம் போடத் தெரியாதவன்தான்! தினமும் பூஜை பண்ணாதவன்தான்! ஆனால், நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கு, அதுதான் ஈரேழு உலகத்தையும் ஆட்டிப் படைக்கிறது. ஒவ்வொருவருக்கும் எதெது கிடைக்கணுமோ,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.