(Reading time: 17 - 34 minutes)
Love

 பூஜா சேலை மாற்றிக்கொள்ள, உள்ளே சென்றாள்.

 ராஜா போன் செய்தான், ஆனால் ஆபீஸ்க்கல்ல; டாக்டர் கமலா செல்வராஜ் நடத்தும் ஜி.ஜி. ஹாஸ்பிடலுக்கு!

 ரிசப்ஷனிலிருந்தவருடன் பேசினான்.

 " குட் மார்னிங்! டாக்டர் கமலா செல்வராஜை பார்க்க இன்று க்ளினிக் வந்தால், அபாயிண்டமெண்ட் கிடைக்குமா?"

 " டாக்டர் வெளியூர் போயிருக்காங்க, திரும்பி வர ஒரு வாரமாகுமே............."

 " தேங்க்ஸ்"

ராஜா பெருமூச்சு விட்டுக்கொண்டே "அப்பாடா! இன்னிக்கு வரவிருந்த ஆபத்திலிருந்து தப்பிச்சாச்சு, தேங்க் காட்!" என்றான்.

 அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டே, எதிரே வந்து நின்ற பூஜா, " என்ன? ஆபத்து, தப்பிச்சேன், அது, இதுன்னு பேசறே?"எனக் கேட்டாள்.

 "அதுவா? ஆபீஸிலே, இன்னிக்கி ஹெட் ஆபீஸிலேயிருந்து சேர்மன் வருவதாக இருந்தது, அவர் வந்தால், எனக்கு லீவு தரமாட்டார்கள். நல்லவேளையாக, அவர் வருவது ஒரு வாரம் தள்ளிப்போட்டிருக்காங்களாம்.."

 " சரி சரி, பேசிக்கிட்டே மசமசன்னு நிக்காதே! சட்டையை போட்டுக்கிட்டு வா, நேரமாச்சு!"

 சந்தோஷமாக ராஜா வெளியே வந்து, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தான். பூஜா பின்சீட்டில் அமர்ந்ததும், ஹாஸ்பிடல் நோக்கி ஓட்டினான்.

 " பூஜா! இன்று டாக்டரைப் பார்த்து செக்-அப் முடித்துவர, எத்தனை நேரமாகும் என்று சொல்லமுடியாது, ஏன்னா எத்தனைபேர் க்யூவிலே இருப்பாங்கன்னு தெரியலே, அதனாலே லஞ்ச் வெளியிலேதான்! எந்த நல்ல ஓட்டலுக்குப் போகலாம்னு யோசனை பண்ணிவைச்சுக்க!"

" சரி, சரி, ரோடிலே ட்ராஃபிக் அதிகமாயிருக்கு, பார்த்து ஓட்டு! நல்லவேளை ரெண்டுபேரும் ஹெல்மெட் போட்டுண்டிருக்கிறோம், இல்லேன்னா போலீஸ் பிடிச்சுடும்...."

 இப்படியே பேச்சு கொடுத்துக்கொண்டே வந்த ராஜா, பூஜாவை டாக்டர் ஊரிலில்லை என்ற ஏமாற்றச் செய்தியை ஏற்கிற மனப்பக்குவத்தை உண்டாக்க, பேச்சை அத்திசையில் திருப்பினான்.

 " பூஜா! ஒருவேளை டாக்டரை இன்று பார்க்கமுடியாதுன்னு சொல்லிட்டாங்கன்னா, வேற டாக்டர் யாரையாவது பார்க்கலாமா? ஏன்னா, லீவு எடுத்தது வீணா போகாமலிருக்கும்............இந்த பிரச்னையை இன்றே தீர்த்துவிடலாம், என்ன சொல்றே?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.