(Reading time: 17 - 34 minutes)
Love

சொன்னா, எல்லா பெரிய டாக்டர்களும் அவளுக்கு குழந்தை பிறக்கிற பாக்கியமில்லேன்னு கைவிட்ட கேஸாம்! பிறகு யாரோ சொன்னாங்களாம், கர்ப்பரட்சகாம்பாளை பிரார்த்தனை பண்ணிக்கோ, கோவிலுக்கும் போய்வான்னு! கற்பகமும் கடைசி முயற்சியா சொன்னபடி செய்தாளாம், கைமேல் பலனாம்! ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கா.....பூஜா! நீயும் அவளைப் போல, கர்ப்பரட்சகாம்பாளை வேண்டிக்கோ, கோவிலுக்கும் போய்ட்டுவாங்க ரெண்டுபேருமா, உங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிட்டும், சரியா?"

 ராஜா, தன்னை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியது, கற்பகமா, கர்ப்பரட்சகாம்பாளா என தீர்மானிக்க முடியாமல், இருவருக்கும் மனதார நன்றி சொன்னான், மனதுக்குள்ளே!

 " ராஜா! எனக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லமாட்டியா, எத்தனை நல்ல செய்தி சொல்லியிருக்கேன்....."

 " நிச்சயமா அக்கா! ஒரு ட்ரீட்டே உங்களுக்கு இன்னிக்கே தரப்போறோம், ஆமாம், நாம மூணுபேரும் லஞ்சுக்கு ஓட்டலுக்குப் போறோம், ஓ.கே.யா?"

 " என்ன இருந்தாலும், ராஜா ராஜாதான்! பூஜாவைப் பார்! இடிச்சபுளியாட்டமா உம்முனு உட்கார்ந்திருக்கா, முகத்திலே பூரிப்பையே காணோம்! ......."

 " அக்கா! ஐந்து வருஷமா நாங்க போகாத கோவிலா, குளமா? கும்பிடாத சாமியா? கற்பகம் போல, ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்றதையெல்லாம் செய்து அலுத்துப்போய்த்தான், கடைசியா டாக்டரைப் பார்க்க முடிவு எடுத்தோம், நீ எதையாவது சொல்லி எங்களை குழப்பாதே! ப்ளீஸ்! இந்தச் சாமி, அந்தச்சாமி, எல்லா சாமியும் ஒண்ணுதான்!"

 " பூஜா! உன் சலிப்பை என்னாலே புரிஞ்சிக்க முடியுது! ஒண்ணு பண்ணு! உன் இஷ்டப்படி டாக்டரைப் பார்த்து, டெஸ்ட் பண்ணிக்கோ! கூடவே, நான் சொல்கிறபடியும் செய்யேன்! என்ன ராஜா? நான் சொல்றது சரிதானே?"

 " டபுள் ஓ.கே., அக்கா!"

 " ராஜாவுக்கென்ன, ட்ரிபிள் ஓ.கே.கூட சொல்வான், அக்கா! தான் ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆகணுங்கிற ஆசையே இல்லைக்கா, அவனுக்கு! எந்த ஊரிலேயோ, எண்ணெய் மழை பெய்கிறமாதிரி, கவலையில்லாம ஜாலியா இருக்காருக்கா! ........"

 " பூஜா! முதல்லே கண்ணைத் துடை! நீ இன்னும் ராஜாவை புரிஞ்சிக்கவேயில்லே, ராஜா அப்படியில்லாம, உன்னோட சேர்ந்து, முகத்தை 'உம்'முனு வைச்சிண்டு இருந்தா, வீடு வீடாவா இருக்கும்? ராஜாவும் நம்மைப்போல சாதாரண மனிதன்தான். அவனுக்கும் ஆசாபாசங்கள் இருக்கு, கூடவே பக்குவமும் முன்யோசனையும் இருக்கு! அதனாலே, தன் மனக்குறையை வெளியில் காட்டிக்காம இருக்கான், இல்லையா ராஜா?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.