(Reading time: 17 - 34 minutes)
Love

நியாயமாகும்? நமது புராணங்களிலேகூட, கல்யாணமே செய்துகொள்ளாத பிள்ளையாரும் உண்டு, ரெண்டு பெண்டாட்டியுள்ள முருகனுமுண்டு! நூறு பிள்ளைகளுக்குத் தாயான, திருதராஷ்டிரன் மனைவியுமுண்டு, குழந்தையே பல வருஷம் பிறக்காமலிருந்து, புத்திரகாமேஷ்டி யாகம் செய்து பிள்ளைகளைப் பெற்ற தசரதனும் உண்டு. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட கலாசாரம் நம்முடையது! அதனாலே, நியாயமான கேள்விகளுக்கு மட்டுமே நாம் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம், மற்றவைகளை புறந்தள்ளிவிட்டு மேலே முன்னேறவேண்டும்........."

 " ரொம்ப அழகான விளக்கம், ராஜா! அடுத்த கேள்வி: குழந்தைகளை பெறுவதினால், என்னென்ன கூடுதல் ஆதாயம்? குழந்தையில்லாதவர்கள் எந்தெந்த வகையில் பின்தங்கி நிற்கிறார்கள்?" இந்தக் கேள்விக்கு முதலில் ராஜா பதில் சொல்லட்டும்.

 " அக்கா! என்னை மன்னிக்கவேண்டும். இந்தக் கேள்வியே எழக்கூடாது. ஒருவரை மற்றவருடன் எந்தச் சூழ்நிலையிலும் எந்த அம்சத்திலும் ஒப்பிடுதல் சரியில்லை என்பது என் உறுதியான அபிப்பிராயம். 

 இருந்தாலும், உங்கள் கேள்விக்கு என் பதில் இதோ!

 கூடுதல் ஆதாயம் என்று சொல்வதையே நான் ஆட்சேபிக்கிறேன். பெற்றோர், குழந்தைகளிடமிருந்து எந்த ஆதாயத்தையும் எதிர்நோக்கி அவர்களைப் பெறுவதில்லை, 'பெற்றோர் எனும் கௌரவமே போதும், என் குழந்தைகள் எங்கிருந்தாலும் நலமாகவும் வசதியாகவும் மகிழ்ச்சியுடனும் வாழவேண்டும் என இறைவனை வேண்டுபவரே பெற்றோர்!

 அக்கா! நீங்கள் எதை மனதில் வைத்து இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது! முதுமைக் காலத்தில், பிள்ளைகள் பெற்றோருக்கு பாதுகாப்பு தருவார்கள், குழந்தைப்பேறு அற்றவர்களுக்கு அந்த பாதுகாப்பு கிடைக்கும் வாய்ப்பேயில்லை, என்பது உங்கள் கேள்வியின் அடிப்படை! 

 இந்தக் காலத்தில் அதுவும் சரியில்லை. பெற்றோரே ஆசைப்பட்டு பிள்ளைகளை நிறைய படிக்கவைத்து வெளிநாட்டுக்கு அனுப்பி அங்கேயே அவர்கள் நிரந்தரமாக வாழவைத்துவிட்டு, பெற்றவர்கள் இந்தியாவில் தன்னந்தனியாகத்தான் இருக்கிறார்கள். ஒருவேளை, இந்த நாட்டிலேயே வாழ்ந்தாலும்கூட பெற்றோர் வாழும் இடத்திலேயே பிள்ளைகளுக்கு உத்தியோகம் கிடைத்து பெற்றோருடன் சேர்ந்து வாழ்வார்கள் என்ற நிச்சயத்தன்மையில்லை. அப்படியே வாழ்ந்தாலும், அது அதிக நாட்கள் நீடிக்குமா, நீடிக்காதா என்பது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். 

 மற்றொரு கோணத்தில் பார்ப்போம், கல்யாணமான புதிதிலேயே சிலருக்கு குழந்தைகள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.