(Reading time: 17 - 34 minutes)
Love

 " அக்கா! உங்களுக்கு இப்ப ஒண்ணும் வீட்டிலே அவசரமா செய்யவேண்டிய வேலை இல்லையே, உட்காருங்க! நிதானமா, விளக்கமா பேசுவோம், முதல்லே பூஜா தன் மனசிலே இருக்கிறதை கொட்டி கவிழ்த்து தீர்க்கட்டும்! பிறகு நான் என் கருத்தை சொல்றேன், பிறகு முடிவா நீங்க என்ன சொல்றீங்களோ, அதை கேட்டு அதன்படி நடக்கிறோம், பூஜா! ஸ்டார்ட்!"

 " அவசரப்படாதே, ராஜா! நான் உங்க ரெண்டு பேர் மனசிலேயும் என்ன இருக்குன்னு திட்டவட்டமா தெரிஞ்சிக்க, சில கேள்விகளை கேட்கிறேன், ஒவ்வொரு கேள்விக்கும் முதல்லே பூஜா, பிறகு ராஜா பதில் சொல்லுங்க! முடிவிலே மூணுபேருமா சேர்ந்து தீர்மானிப்போம். என்ன சொல்றே, பூஜா?"

 " சரி அக்கா!"

 " தலைமுறை தலைமுறையா, நம்ம நாட்டு கலாசாரப்படி, குடும்பம் என்பது கணவன், மனைவி, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் கொண்டது! எல்லோருக்குமே அது துவக்கத்திலிருந்து இறுதிவரை ஒரேமாதிரியாக இருக்காது, கணவனை இழந்த மனைவி, குழந்தைகள், அதேபோல, மனைவியை இழந்த கணவன் குழந்தைகள், குழந்தைகளே பிறக்காத கணவன்-மனைவி, குழந்தைகள் பிறந்து சில வருஷங்களிலேயே இறந்துவிடுகிற குடும்பங்கள், இப்படி எல்லாவிதமாகவும்தான் இருந்துவருகிறது. ஊரிலே உலகத்திலே இத்தனை விதங்களிலே எந்தவிதமா இருந்தாலும், குடும்பத்தை ஏதாவது பழி சொல்வாங்க, அதற்கு நாம் பயப்படக்கூடாது. நீங்க என்ன நினைக்கிறீங்க?"

 " அக்கா! பயப்படாவிட்டாலும், சமூகத்திலே சேர்ந்து வாழ்கிறபோது, மற்றவங்க கேள்விகளுக்கு பதில் சொல்லித்தானே ஆகணும். இளமையிலேயே கணவனை இழந்த விதவையை 'புருஷனை விழுங்கிட்டு குத்துக்கல்லா நிக்கறா பார்!' னு தூற்றுவாங்க! குழந்தை பெறாத மனைவியை 'மலடி'ன்னு எதிலும் சேர்க்கமாட்டாங்க, இப்படியெல்லாம் ஏசுவதை தவிர்க்க முயற்சி செய்துதான் ஆகணும், நீ சொல்லு, ராஜா!"

 " பூஜா! சமூகத்திலே நல்லவங்க, வம்பு பேசறவங்க, கெட்டவங்க, உதவி செய்கிறவங்க, உபத்திரவம் தரவங்கன்னு இப்படி பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறதனாலே, நீ சொல்கிற ஊர்ஜனங்க, சமுதாயத்திலே யார் எது சொன்னாலும் அதுக்கு தொட்டாற்சுருங்கியா இல்லாம, நாம் நல்ல எண்ணத்தோடு சொல்லப்படுவதை மட்டுமே லட்சியம் செய்யவேண்டும். நிறைய குழந்தைகளை பெற்றவளை பார்த்து 'இவளுக்கு வேற வேலையா கிடையாதா'ம்பாங்க! குழந்தையே பிறக்கலைன்னா, நீ சொல்றமாதிரி 'மலடி'ன்னு தள்ளிவைப்பாங்க! இது இரண்டிலுமே, சம்பந்தப்பட்ட பெண், என்ன தவறு இழைத்தாள்? அவளை தூற்றுவது எப்படி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.