(Reading time: 13 - 25 minutes)

 அவனுடைய கதை முற்றிலும் புதுமையானதென்றும், மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெறும் எனவும், முதல்நாள் வசூலிலேயே, போட்ட முதலை எடுத்துவிடலாமென்றும், பிறகு வசூலாகிற பணம் அத்தனையும் அவனுக்கே சொந்தம் என்றும் கூறி அவனை ஏமாற்றி, அவன் பணத்தை முற்றிலும் கறந்துவிட்டனர்.

 பெரிய முன்னனி நடிகையிடம் முழு சம்பளத்தையும் முன்பணமாகத் தந்து அவளிடமிருந்து கால்ஷீட் வாங்கியபின், படத்தின் டைரக்டர், மியூசிக் டைரக்டர், கேமராமென், மற்றவர்களை ஒப்பந்தம் செய்தவுடன் கணக்குப் பார்த்தபோதே, அவன் கையிருப்பு சுத்தமாக காலியாகிவிட்டது.

 வங்கிகளிடமிருந்து கடன் பெற்று, ஷூட்டிங் துவங்கியது!

 முதல் ஷூட்டிங்கில் ஹீரோயினுடன் அவன் நடிக்கும்போதே, அவள் தகராறு செய்யத் துவங்கினாள்.

 " டைரக்டர் சார்! அவரு தயாரிப்பாளராக இருக்கட்டும், ஆனா ஹீரோவாக வேற நல்ல நடிகரைப் போடுங்க! அவருக்கு கொஞ்சங்கூட முன் அனுபவம் இல்லாத காரணத்தினாலே, கூச்சப்படறாரு, நாடகபாணியிலே நடிக்கறாரு, பார்க்க அசிங்கமா இருக்கு! அவரை மாற்றலேன்னா, படம் படுதோல்வி அடையும், பாவம்! அவருதான் நடுவீதியிலே நிற்கவேண்டி வரும்!"

 " கேமராமென் சார்! நீங்க என்ன நினைக்கிறீங்க?"

 " ஹீரோயின் சொல்றது நூற்றுக்கு நூறு கரெக்ட்! அவரு கேமராவை பார்க்கவே பயப்படறாரு, ஒண்ணு செய்வோம், அவரை இந்தப் படத்திலே சைட் ரோல்லே நடிக்க வைச்சு பயிற்சி தந்து, அடுத்த படத்திலே ஹீரோவாக்கிடுவோம், சரியா?"

 நாகேஷுக்கும் அவர் சொன்னது சரியெனப் பட்டது.

 மேற்கொண்டு மூன்று கோடி ரூபாய் கடன் வாங்கி, முன்னணி நடிகரை ஒப்பந்தம் செய்து, மீண்டும் ஷூட்டிங் துவங்கியது.

 இப்படி ஒரு பக்கம் கடன்சுமை ஏறும்போதே, நாகேஷ் சிறுவயதிலிருந்தே கண்ட கனவும் இலட்சியமும் நயவஞ்சகர்களால் தூள்தூளாயின!

 கொஞ்சம் கொஞ்சமாக, மற்றவர்கள் நாகேஷின் மனதை கலைத்து, திரைக்கதையை முற்றிலும் சினிமா பாணியில் மாற்றிவிட்டனர்.

 " புரொட்யூசர் சார்! உங்க கதை ரொம்ப நல்ல கதைதான், ஆனா இப்ப இருக்கிற மாடேர்ன் டிரெண்டுக்கு ஒத்துவராது, நாடகபாணியிலே இருக்கு! மக்கள் அதை விரும்பமாட்டாங்க! படம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.