(Reading time: 13 - 25 minutes)

 பாலகனை அணைத்துக்கொண்டு படுத்த பிரமீளா, நிலைகுலைந்து போயிருந்த கணவனை எப்படி தேற்றுவது என யோசித்தவாறே, இரவை கழித்தாள்.

 விடியற்காலை விழிப்பு வந்ததும், பிரமீளா முதல் காரியமாக, கணவனை தொட்டுப் பார்த்தாள்.

 அவன் உடல் சில்லிட்டிருந்தது! நாடி பிடித்து பார்த்தாள். துடிப்பே இல்லை. இருதயத்தில் கைவைத்துப் பார்த்தாள். மூச்சேயில்லை.

 வெளியே ஓடிப்போய், அதே தெருவிலிருந்த டாக்டரை கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வந்தாள்.

 " மேசிவ் ஹார்ட் அட்டேக்! மாரடைப்பு! உயிர் பிரிந்து ஒரு மணி நேரத்துக்கு மேலே இருக்கும். சர்டிபிகேட் தரேன், வந்து வாங்கிண்டு பாடியை அடக்கம் செய்கிற வழியை பாரும்மா!"

 பிரமீளா, தன் கணவனின் உடலை அடக்கம் செய்ய, தேவையான பணத்துக்கு என்ன செய்வது என புரியாமல் திகைத்தாள்.

 அப்போதுதான், அக்கம்பக்கத்து ஜனங்கள் வந்து வருத்தம் தெரிவித்துச் சென்றனர்.

 எல்லோரும் வெளியேறியபிறகு, ஒருவன் உள்ளே நுழைந்தான்.

 பிரமீளா தலை நிமிர்ந்து பார்த்தாள்.

 முதல்நாள் இரவு வந்தவன், நாகேஷின் உயிரைப் பறித்தவன்!

 " தங்கச்சி! செய்தி கேட்டதும், பதறிப்போய் அலறியடிச்சிண்டு ஓடிவந்திருக்கேம்மா! பாவிப்பய! இப்படி பொசுக்குனு பூட்டானே!

 தங்கச்சி! இப்பவாவது இந்த சமூகத்தை நல்லா புரிஞ்சிக்க!

 கூட்டம் கூட்டமா தெருமக்கள் வந்து போனாங்களே, யாராவது ஒருத்தர் உன் துணைக்கு, உதவிக்கு இருந்தாங்களா? ஓடிப்பூட்டாங்க!

 கவலைப்படாதேம்மா! எவ்வளவு செலவானாலும் உன் புருசனை நல்லபடியா அடக்கம் செய்யவேண்டியது, என் பொறுப்பு!

 இந்த நிமிஷத்திலிருந்து, நீயும் உன் பாப்பாவும் என் பாதுகாப்பிலே இருக்கப் போறீங்க! என் வீட்டிலே உன் பாப்பா வளர்ந்து படிச்சு வேலைக்குப் போய் சம்பாதிச்சு கௌரவமா வாழ்ந்து காட்டப் போறான்.

 இப்ப, முதல்லே நான் வெளியிலே போய், நாகேஷை அடக்கம் பண்ண ஆகவேண்டிய ஏற்பாடுகளை செய்கிறேன்........."

 அவன் வெளியேறிய அடுத்த வினாடியே, பிரமீளா இடுப்பில் தன் மகனை தூக்கிக்கொண்டு,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.