(Reading time: 10 - 19 minutes)

 

 கிழவி ஏதோ தனக்குள் பேசிக்கொண்டே, வீதியில் இறங்கி நடந்தாள்.

 அவள் நகர்ந்ததும், "முதலாளி! கிழவி போயிடிச்சி, வெளியிலே வாங்க!"

 சிறிது நேரமாகியும், முதலாளி வெளியே வராத காரணத்தால், ஊழியன் உள்ளே போய் பார்த்தான்.

 அவர் தன் வாயில் மேல் துண்டை வைத்து மூடிக்கொண்டு கன்னங்களில் நீர் வழிந்தோட, அழுது கொண்டிருந்தார்!

 பதறிய ஊழியன் முதலாளியை தொட்டு எழுப்பி, வெளியே அழைத்து வந்து, கல்லா பெட்டி முன் அமர்த்தினான்.

 அவரிடம் இப்பொழுது எதுவும் கேட்கக்கூடாது, கேட்டால் அவர் பழங்கதைகளை சொல்லி அழுவார், வியாபாரம் கெட்டுப் போயிடும், என ஊழியன் மளிகை வாங்க வந்த வாடிக்கையாளரை கவனித்தான்.

 வீதியில் தயங்கித் தயங்கி நடந்த கிழவியின் மனதில், அடுத்து எங்கு செல்வது, யாரிடம் கடன் கேட்பது, பெற்ற குழந்தைகளின் பசியை போக்குவது எப்படியென தீவிர சிந்தனை!

 அவள் சிந்தனையை கலைப்பதுபோல, மணி அவள் எதிரே நின்று வழி மறித்தான்.

 மணியை தட்டிக் கொடுத்த கிழவி, " மணி! என்னை என்னடா செய்யச் சொல்றே? உனக்கு ரொட்டி வாங்கித் தர, என்னிடம் காசில்லைடா! என்னை மன்னிச்சிடுடா!" என்று மணியின் கண்களைப் பார்த்துச் சொன்னதும், மணி பேசாமல் தலையை தொங்கப் போட்டவாறு கிழவியின் சேலையைப் பிடித்து முன்னே இழுத்தான்.

 " எங்கேடா கூப்பிடறே?"

 மணி பதில் கூறாமல், அவளை அழைத்துச் செல்வதிலேயே குறியாக இருந்தான்.

 மணி, கிழவி வசிக்கும் தெருவில் வாழ்கிற, நாய்! பல ஆண்டுகளாக கிழவிக்குப் பழக்கம்.

 பழகத் துவங்கிய நாட்களில், வீட்டுத் திண்ணையில் தன்னை அமர்த்தி நல்ல ருசியான, சமைத்த உணவை ஊட்டிய கிழவி தற்போது பன்னும் ரொட்டியும் பிஸ்கட்டும் கொடுப்பதை மணி வித்தியாசமே பாராட்டவில்லை!

 கிழவியின் கையால், விஷத்தை கொடுத்தால்கூட, அமுதமாக நினைத்து, சாப்பிடுவான், மணி!

 பகல் முழுவதும், தெருவில் அங்கும் இங்கும் லோலோ என அலைந்து திரிந்துவிட்டு இரவு உறங்கவும் கிழவிக்கு துணை நிற்கவும், அவள் வீட்டு திண்ணையில்தான் படுப்பான்!

 மணி கிழவியை அழைத்துச் சென்று அவள் வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு, வாலை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.