(Reading time: 10 - 19 minutes)

எவராக இருந்தாலும், அவர்கள் சீரும் சிறப்புமாக வாழவேண்டும் என நினைப்பாள்.

 கணவன் இறந்தபின், அவளுக்கு மாதாமாதம் கிடைத்த பென்ஷன் தொகை கணிசமாக குறைவாக இருந்ததால், குடும்பச் செலவுகளை எதிர்கொள்வதில் பெரிதும் சிரம்ப்பட்டாள், குமாரி! ஆயினும், நம்பிக்கை தளரவில்லை!

 "அக்கா! என்ன பெரிய யோசனை? கிளம்பு சீக்கிரமா!"

 " கணபதி! என் புருஷன் சாகும்போது என்னை சத்தியம் செய்யச் சொன்னார், 'எந்தக் காரணத்தைக் கொண்டும் நீயோ குழந்தைகளோ பிறருக்கு சுமையாக இருக்கக் கூடாது, அப்படியிருந்தால், இறைவன்மீது நம்பிக்கையில்லை என்று பொருள்!'

 நானும் செய்து கொடுத்தேன், அதனாலே என்னை வற்புறுத்தாதே!"

 " உன்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்ட உன் புருஷன்தான் நேற்று ராத்திரி நம்ம அம்மா கனவிலே வந்து உன்னையும் குழந்தைகளையும் உடனே போய் அழைத்து வந்து உங்களுடன் வைத்து காப்பாற்றுங்கள்! னு கெஞ்சினார், அதனால்தான் உடனே ஓடிவந்தேன், கிளம்பு!"

 கணபதிக்கு ஆச்சரியம்! எப்படி தன்னால் சமயோசிதமாக ஒரு பொய் சொல்ல முடிந்தது, என்று!

 அதே நேரத்தில், மளிகைக் கடையில் முதலாளி, தன் ஊழியனிடம் பேசிக்கொண்டிருந்தார்.

 " டேய்! கிழவியாக இளைத்து உடம்பு சுருங்கிட்டாலும், அவங்க கிழவியில்லேடா! வறுமையின் கொடுமை அவங்களை அப்படி மாற்றிவிட்டது.

 அவங்க சீரும் சிறப்புமா வாழ்ந்தபோது, எனக்கு பல உதவிகள் செய்திருக்காங்கடா!

 அப்போது நான் வறுமையில் வாடினேன். என் மனைவி அவர்கள் வீட்டு வேலைக்காரியாக இருந்தாள். அப்போதெல்லாம், நானும் என் மகனும் அவங்க வீட்டுக்குப் போய், தினமும் வயிறார சாப்பிடுவோம், ஒரு வேளை!

 அது மட்டுமா? என் மனைவி, பிரசவ வலியுடன் நள்ளிரவில் துடித்தபோது, அந்தம்மாதான் பிரசவம் பார்த்து என் மனைவியையும் மகனையும் காப்பாத்தினாங்க! அன்று அவங்க அந்த உதவி செய்திராவிட்டால், நான் என் மனைவியையும் மகனையும் இழந்திருப்பேன்.

 முக்கியமாக, இந்தக் கடையை துவங்க, பணம் கொடுத்து உதவியதே, அந்த அம்மாவின் புருஷன்தான்!

 இன்று அவங்க கஷ்டப்படறபோது, நான் அவங்களிடம் பணம் எதிர்பார்ப்பது மகா பாபம்டா! ஒரு கிலோ அரிசியின் விலை வெறும் ஐம்பது ரூபாய்! ஆனால், அவர்கள் எனக்கும் என் குடும்பத்துக்கும் செய்திருக்கிற உதவியோ, பல கோடி ரூபாய்க்கு ஈடாகும்!

 நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்டா! உடனே அதை சரி செய்யலேன்னா, என் மனசாட்சியே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.