(Reading time: 10 - 19 minutes)

 குழந்தைகள் மூவரையும் அறிமுகம் செய்யவில்லையே, மூத்தவன் முருகன், வயது பன்னிரண்டு! அடுத்தது, ரோஜா, வயது எட்டு! கடைக்குட்டி கலா, வயது ஐந்து!

 நாற்பது வயது 'கிழவி'யின் பெயர் குமாரி! கணபதியின் வயது முப்பது!

 குமாரியின் இறந்துபோன கணவனின் பெயர், மார்க்கண்டேயன்! 

 ஆம், சாகா வரம் பெற்றவனின் பெயரைக் கொண்டவன் மூன்று வருடங்கள் முன்பு டிங்கு காய்ச்சலுக்கு பலியானான்.

 அவன் உயிரோடிருந்தவரை, நல்ல உத்தியோகத்தில் கைநிறைய சம்பாதித்து குமாரி, குழந்தைகளை சீரும் சிறப்புமாக கவனித்துக் கொண்டான்.

 கணவன்-மனைவி இருவருமே வெகுளி! தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் பிறருக்கு வாரி வழங்குவர்.

 " குமாரி! இறைவன் நம்மை அவனுடைய தூதுவனாக பூமிக்கு அனுப்பியிருக்கிறான். நம்மிடம் அவன் தந்திருக்கிற செல்வம், நமக்கு மட்டுமல்ல, நம் மூலமாக, அவன் சார்பில், பிறருக்கும் வழங்கப்படுவதற்குமே!

 நம்மையும் நம் குழந்தைகளையும் காப்பது, நம் திறமையோ, வருமானமோ, உழைப்போ அல்ல; அவன் கருணை!

 தவிர, பிறருக்கு கொடுப்பதில், அதிக மகிழ்ச்சி கொடுப்பவனுக்கே! கொடுத்துப் பார்! நான் சொல்வதிலுள்ள உண்மை புரியும்!

 எதையும் நாளைக்காக சேமித்து வைக்க நினைக்காதே! ஆண்டவன் நமக்கு எது, எப்பொழுது, எவ்வளவு தேவையோ, அதை அந்த நேரத்துக்கு அந்த அளவு தருவான். நேரில் வரமாட்டான், மனித உருவில் தூதுவர்கள்மூலம் தருவான். இதை நம்பு! திடமாக நம்பு! எவ்வளவு சோதனைகள் வந்தாலும் நம்பு!"

 " சோதனைகள் வரும்போது, நம் மனநிலை தடுமாறும். அப்போதெல்லாம், இதைவிட பெரிய துயரிலிருந்து இறைவன் நம்மை கருணையுடன் காப்பாற்றியுள்ளான் என ஆறுதல் அடையவேண்டும். இரண்டாவது, 'இதுவும் கடந்துபோகும்' என நம்பவேண்டும்........"

 அவன் சொன்னபடி குமாரி நடந்துகொள்கிறாளா என கூடவிருந்து கவனித்து, தேவையானால் திருத்துவான்.

ஒருவேளை, தன் அகால மரணத்தை அவன் முன்னமேயே அறிந்திருந்தானோ என்னவோ!

 குமாரி கணவன் அறிவுரையை மனமாரப் பின்பற்றினாள். வீட்டில் வேலை செய்பவர், துணி வெளுப்பவர், சவரத் தொழிலாளி, பால்காரன், தெருநாய், முன்பின் அறிமுகமில்லா அன்னியர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.