(Reading time: 10 - 19 minutes)

 அப்போதுதான் தெரிந்தது, ராஜாவின் பெற்றோர், கிராமத்திற்கு சென்றிருக்கிறார்கள் என்பது!

 வேறுவழியின்றி, பஞ்சும் நெருப்பும் ஒரே வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும்படி ஆயிற்று!

 ராஜா கண்ணியமாகப் பழகினான். அவளை தொடாமல் பேசினான். அவளுக்கு உறங்க, தனியறை

ஒதுக்கினான்.

 அவளை நேர்காணல் நிறுவனத்துக்கு அழைத்துப் போய்வரவும் மற்ற உதவிகள் செய்யவும், தன் அலுவலகத்தில் லீவு எடுத்துக் கொண்டான்.

 சுவேதாவும் நன்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு முதல்நாள் நேர்காணலுக்கு சென்றாள்.

 அவள் பயந்ததைவிட, சுலபமாகவே இருந்தது. மறுநாளும் வரச் சொன்னதைக் கேட்டதும், சுவேதாவின் மகிழ்ச்சி அவள் முகத்தில் ஜொலித்ததைப் பார்த்த ராஜா, அவளை தொட்டு கைகுலுக்கினான், முதல் முறையாக!

 ராஜா தந்த உற்சாகத்தில், முதல்நாள் வெற்றி தந்த நம்பிக்கையில், சுவேதா இரண்டாம் நாள் நேர்காணலில் தயக்கமின்றி தெளிவாக பதில் அளித்து, இறுதி சுற்றுக்கும் தேர்வானாள்.

 அன்று சுவேதாவை அருகிலிருந்த கோவிலுக்கு அழைத்துச் சென்றான். அன்று ஏதோ விசேஷம்! கூட்ட நெரிசலில், இருவரும் ஒருவராய் உள்ளே புகுந்து, தரிசனம் முடிந்து திரும்பும்போது, ஒருவரை ஒருவர் பார்த்து, அர்த்தமுடன் சிரித்துக் கொண்டனர், ஆனால் ஏதும் பேசவில்லை!

 மறுநாள் இறுதிச் சுற்றிலும், சுவேதா தேர்வானதும், உணர்ச்சிப் பிரவாகத்தில், ராஜா அவளை இறுக கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.

 சுவேதா அவனை தடுக்கவில்லை!

 " ராஜா! என் உயிருள்ள வரையில், நீ எனக்கு செய்த இந்த உதவியை மறக்க மாட்டேன்......."

 " மறக்கவிடமாட்டேன், நானும்! சுவேதா! ஏதோ ஒரு புரியாத சக்தி, நான் உன்னை பார்த்த முதல் சந்திப்பிலேயே, என்னை நீ முற்றிலும் ஆட்கொண்டுவிட்டாய்......"

 இப்படி துவங்கிய இதயப் பரிமாற்றம், அன்றிரவுப் பொழுது தந்த மயக்கத்தில், ஒன்றுசேர வைத்துவிட்டது!

 பொழுது விடிந்ததும், இருவரும் தாங்கள் செய்த அத்து மீறிய செயலுக்காக உளமார வருத்தப்பட்டார்கள்.

 " அழாதே, சுவேதா! உலகமே எதிர்த்தாலும், யார் தடுத்தாலும், உன்னை நான் கைவிட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.