(Reading time: 27 - 54 minutes)

போராடினார்கள். ஆனால் முடியவில்லை. தன் வாழ்வும் இப்படித்தான் என்று அவள் சலித்துக் கொண்டாள்.

அவளுக்கு வந்த வரன்கள் எல்லாம் என்ன காரணத்தினாலோ தட்டிப் போய்க் கொண்டேயிருந்தன. நாளுக்கு நாள் சித்தியின் கொடுமை அதிகமாக அவள் வாழ்வையே வெறுத்துத் தன் முடிவைத் தேடிக் கொள்ள விசத்தை விழுங்கிவிட்டாள். கடைசி நேரத்தில் அவளைக் காப்பாற்றிவிட்டனர். அவளது தந்தைக்கு அவள் மீது பாசம் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ள முடியாத நிலை.

அந்த நேரத்தில்தான் சுமித்ரா தனது மகனிற்கு அவளைப் பெண் கேட்டு வர அவளது தந்தை  மகிழ்ந்து போனார். அதற்கு மாறாக அவளது சித்திக்கு அதில் விருப்பமேயில்லை. எங்கே தனக்கு அடங்கியிருந்தவள் தன் கை மீறிப் போய்விடுவாளோ என்ற கவலை? ஆனாலும் தன் மகள் வாழ்வில் விடியாதா? என்ற கவலையுடன் இருந்த அவள் தந்தை தன் மனைவியின் பேச்சிற்கு செவி சாய்க்கவில்லை. அதனால் தன் மூத்தார் மகளின் மனதைக் கரைக்க ஆரம்பித்தாள்.

சினிமாக்காரனான அவன் எப்படி அவளை மணம் புரிய முடிவு செய்தான்? தன்னுடைய கதைக்கே அப்படி நாயகிகளை தேடி அலைகிறவன். அவளிடம் என்ன இருக்கிறது என்று அவளை மணம் புரிய ஒத்துக் கொண்டான்?

இந்தக் கேள்வி கயல்விழிக்கும் இருந்தது. அவள் ஒல்லியான உடல்வாகு. வெடவெடவென்று வளர்ந்திருப்பாள். அத்துடன் அவள் முகத்தில் இருந்த அந்த வடுவினால் அவள் அதிகம் கண்ணாடி பார்ப்பதே இல்லை. அதனால் அக்கறையற்று விடப்பட்ட அவளது தோற்றம். அவள் அவனுக்குப் பொருத்தமாக படிக்கவில்லை. வசதியும் இல்லை. அப்புறம் ஏன் அவன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டான்?

ஏன்னா காரணம் இல்லாமல் எதுவுமில்லை. உன்னை அவங்க குடும்பத்திற்காகக் கல்யாணம் செய்து வீட்டிலேயே வைத்துவிடுவான். அதன் பிறகு அவன் விருப்பம் போல் இருப்பான். அவன் வசதிக்குப் பெண் எடுத்தால் ஏன் என்று  கேட்பாள். நீ அப்படிக் கேட்கமாட்டாய். கேட்கவும் முடியாது. அவன் கூடவே ஒரு பெண் அலைந்து கொண்டிருந்தாள். பெயர் கூட வினுவோ என்னவோ சொன்னாங்க.அப்படியே பொம்மை கணக்கா எத்தனை அழகா இருந்தாள் தெரியுமா? அப்படி எல்லாம் பெண்கள் இருக்கையில் அவன் உன்னைக் கல்யாணம் செய்துக்கிட்டால் காரணம் இல்லாமலா இருக்கும்.

நீயும் புத்திசாலித்தனமாக நடந்துக்கோ. உனக்குப் புருசன் உறவு நிலைக்கனும்னா மாமன் மாமியை கைக்குள்ள போட்டுக்கோ. அவங்க வீட்டில் வேலைக்காரியாகவாவது நீ காலந்தள்ளலாம். கண்ணைக் கசக்கிக்கிட்டு இங்கே வந்துடாதே. இப்ப பெரிய இடத்துச் சம்பந்தம் வந்துடுச்சுன்னு ஆட்டம் போடற உன் அப்பனுக்கு நெஞ்சு வெடிச்சுடும்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.