(Reading time: 11 - 21 minutes)

அனைவரும், பள்ளிக்குப் போகுமுன், அவள் வீட்டில் சிறிதுநேரம் இளைப்பாறிவிட்டு, சேர்ந்து பள்ளிக்கு செல்வார்கள்.

 அதனால், கல்பனாவுக்கு எல்லா மாணவிகளும் நெருங்கிய நட்பு!

 கல்பனாவுக்கு திடீரென சிரிப்பு வந்தது. காரணம், அந்த சின்ன வயதிலேயே, மாணவர்கள் அவள் வீட்டுக்கு எதிரே அரைமணி நேரம் முன்னதாகவே வந்து, காத்திருந்து, அவர்களுக்குப் பிடித்த மாணவிகளை 'டாவ்' அடிப்பார்கள்.

 மாணவிகளும் லேசுப்பட்டவர்களில்லை, அவர்களும் மாணவர்களை ஓரக்கண்ணால் பார்ப்பதும் கண்சிமிட்டி சிரிப்பதும் உண்டு.

 ஆனால், இந்த விவகாரத்தில் சிக்காமல், ஒதுங்கி ஒழுக்கமுடன் இருந்த ஒருசில மாணவிகளில் எழிலரசியும் ஒருத்தி!

 அவள் அழகுக்கு பெண்களே அடிமையென்றால், மிகையில்லை. அவ்வளவு அழகு! ஆனால் மிகுந்த அடக்கம்! தலை நிமிர்ந்து அவசியமின்றி பிறரை பார்ப்பதோ, பார்த்து சிரிப்பதோ, எதுவும் கிடையாது.

 கல்பனாவின் தாய்கூட அவள்மீது மதிப்பும் அன்பும் வைத்திருந்தாள்!

 " கல்பனா! பெயருக்கேற்றமாதிரி, எழிலரசி ரொம்ப அழகுடீ! அவ அழகுக்கு வேற யாராவதாக இருந்தால், கர்வமா திமிர் பிடித்து அகம்பாவத்தோட நடந்துப்பாங்க. ஆனா அவள் ரொம்ப அடக்கம், பார்த்தியா? நீயும் அவளைப்போல இருக்கணும்." என்பாள்.

 இத்தனை அழகான பெண்ணைப் பார்த்து சில ஆசிரியர்களே ஜொள்ளு விட்டபோது, பக்குவமில்லாத மாணவர்கள் ஆசைப்படாமல் இருப்பார்களா?

 அவளுக்கு முன்னும் பின்னும் 'பாடிகாட்' போல, அணிவகுத்துச் செல்வார்கள்.

எதற்காகவாவது அவள் தலைநிமிர்ந்து பார்க்கமாட்டாளா என ஏங்குவார்கள்!

 குறிப்பாக இருவரும் பத்தாம் வகுப்பு படித்தபோது, எழிலரசியை வெளிப்படையாகவே பின்தொடர்வதும், வலியவந்து பேசுவதும், தனக்குப் பிறந்தநாளென அவளுக்குப் பரிசு கொடுப்பதுமாக இருந்தான், ஒரு மாணவன்!

 எழிலரசியினால் பொறுக்கமுடியாத அவளுக்கு, அவளை இம்சித்தான். தாங்கமுடியாமல், எழிலரசி ஒருநாள் கல்பனாவையும் உடன் அழைத்துச்சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தாள்.

 அவன் உடனே வரவழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டதோடு, அவன் பெற்றோருக்கும் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது!

 " அடுத்த முறை இப்படி நடந்துகொண்டால், டி.சி. கொடுத்துவிடுவேன்" என கடுமையாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.