(Reading time: 11 - 21 minutes)

 நானும் நம்பிக்கையோடு காலம் தள்ளினேன்.

 இறைவனுக்கு அது பொறுக்கவில்லை என்பது போல், எங்கள் கம்பெனிக்கு அடிக்கடி வந்து போகிற ஒரு அராபியர், நான் ஆதரவற்றவள் என்பதை தெரிந்துகொண்டு, என்னை கடத்திக்கொண்டு போக முடிவு எடுத்து, அதற்கு கூலிப்படையையும் ஏற்பாடு செய்துவிட்டார்.

 நல்லவேளை, அவர்களின் திட்டம், என்னுடன் பணியாற்றுபவர் மூலம் எனக்கு தெரியவந்ததும், நான் பதறிப்போய், என்ன செய்வதென தெரியாமல், அழுதுகொண்டிருந்தபோது, உங்கள் தம்பி பார்த்துவிட்டு விசாரித்தார்.

 நான் எனக்கு நேரவிருக்கும், நெருங்கிவிட்ட ஆபத்தை தெரிவித்தேன்.

 அவர் உடனே என்னை பாதுகாத்து வந்த முதியவரிடம் பேசினார்.

 " கவலைப்படாதே! போலீஸிடம் தெரிவித்து உனக்கு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.

 " ஐயா! எனக்குத் தெரிந்து, இந்தமாதிரி கடத்தல்கள் காவல்துறையில் உள்ள சில கருப்பாடுகளின் உதவியுடன் பயமின்றி நடக்கிறது. அதனால், அவர்களை நம்பி பலனில்லை. இவளை நான் என்னுடன் சென்னைக்கு அழைத்துச் செல்கிறேன். அனுமதியுங்கள்!" என்று உங்கள் தம்பி கேட்டார்.

 " உங்களை நம்பி எப்படி இந்த அபலைப் பெண்ணை அனுப்புவது? இவளை யார் மனைவியாக்கிக் கொள்கிறார்களோ, அவருடன்தான் இவளை அனுப்புவேன்." என்று கறாராக கூறியதும், உங்கள் தம்பி பின்வாங்கினார்.

 உடனே நான்தான் அவர் காலில் விழுந்து, கெஞ்சி, என் கழுத்தில் தாலி கட்டி அழைத்துப் போகச் சொன்னேன்.

 " அவசரப்படாதே! ஒரு வாரத்திற்குள் ஒரு நல்ல இளைஞனை, உனக்குப் பொருத்தமானவனை, அழைத்துவந்து அவனை ஆர்யசமாஜத்தின் ஆதரவுடன் உன் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொள்ள வைக்கிறேன்." என்றார்.

 " ஐயா! ஒரு வாரத்திற்குள்ளே, நிச்சயமாக என்னை நிச்சயமாக கடத்திக் கொண்டு போய்விடுவார்கள். நீங்கள் என்னை காப்பாற்ற உண்மையாகவே நினைத்தால், ஆர்யசமாஜத்தின் ஆதரவுடன் நீங்களே என் கழுத்தில் தாலி கட்டி உடனடியாக அழைத்துச் செல்லுங்கள்" எனக் கதறினேன்.

 வேறு வழி தெரியாமல் அவரும் அப்படியே செய்தார்.

 இதிலே உங்கள் தம்பியின்மீது எந்தத் தவறும் இல்லை என்பதோடு அவருடைய நல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.