(Reading time: 10 - 20 minutes)

 " தூங்கிண்டுதான் இருந்தேன், திடீர்னு உன் ஞாபகம் வந்தது. எழுந்து பார்த்தேன். நீ மும்முரமாக படித்துக்கொண்டிருந்தாய். உனக்கு தூக்கம் வராமலிருக்க, சூடா டீ கொண்டு வந்திருக்கேன், குடி!"

 டீயை வாங்கி, மேஜையில் வைத்துவிட்டு, நயனி குமுதவல்லியின் கைகளைப் பாசத்துடன் பிடித்தவாறே, அவளை சில வினாடிகள் பார்த்தபோது, அவன் கண்களில் நீர் தளும்பியது.

 " போடா, அசடு! எல்லா அம்மாவுக்கும் இப்படி பிள்ளைக்கு செய்வது, பெருமையான விஷயம்டா! நல்லா படி! உன்னை ஆர்க்கிடெக்ட் படிப்பு படிக்கவைத்து பெரிய ரியல் எஸ்டேட் அதிபராக்கணும்னு எனக்கும் அப்பாவுக்கும் ஆசை! எங்கப்பா மாதிரி நீயும் கோடீஸ்வரனாகணும்டா!"

 " அம்மா! ரியல் எஸ்டேட் அதிபராவதற்கு, ஆர்க்கிடெக்சர் படிப்பு தேவையில்லேம்மா! நாணயமா, சொன்ன தேதிக்குள்ளே, வீட்டை கட்டிக்கொடுத்தா, போதும்! அதை விடு, அம்மா! நீ எதை ஆசைப்படறியோ, அதை நிறைவேற்ற வேண்டியது, என் கடமை!"

 நயனியை கட்டியணைத்து முத்தமிட்டுவிட்டு, குமுதவல்லி நகர்ந்தாள்!

 மறுநாள் காலை, குமுதவல்லிக்கு அட்வகேட் போன் செய்தார்.

 " உங்க கேஸிலே, ஹைகோர்ட்டு இறுதி முடிவு நமக்கு சாதகமா வந்திருக்கு! ஆனா, இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி, சுப்ரீம் கோர்ட் போவாங்க போலிருக்கு! அப்படி போகலைன்னா, நாம கேட்ட பத்து கோடியோட, வட்டி சேர்த்து, பதினைந்து கோடி கைக்கு வந்துடும். எனக்கு ஒரு கோடி தந்துடுங்க, சரியா?"

 குமுதவல்லி குதூகலித்தாள். அவள் கணவனும்தான்.

 தங்கைகள் நால்வரும் தம்பி நயனியும் தானும் கோடீஸ்வரனாகிவிடப் போகிறோம் என நம்பி, அடுத்த ஓரிரு ஆண்டுகளில் தங்கைகள் நால்வருக்கும் பணக்கார வரனாகப் பார்த்து மணமுடித்தாள்.

 தங்கைகளும் அவர்களின் கணவன்களும் அதன்பிறகு அடிக்கடி வழக்கைப்பற்றி விசாரித்துக் கொண்டிருந்தனர்.

 நயனிக்கு இருபத்திரண்டு வயது முடிந்தபோதுதான், வழக்கில் இறுதி தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்டு ஃபுல் பெஞ்ச், அளித்தது.

 அந்த தீர்ப்பு சாதகமாக இருந்ததோடு, ஈட்டுத் தொகையையும், காலம் கடத்தி காரணத்தினால், அபராதமாக, இருபது கோடியாகவும் இருபத்திரண்டு வருட வட்டியாக மற்றும் ஐந்து கோடியும் தரவேண்டும் என தீர்ப்பு வந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.