(Reading time: 10 - 20 minutes)

 அட்வகேட் அரவாமுதன், குதூகலத்துடன், குமுதவல்லியைத் தேடி அவள் வீட்டுக்கு வந்தபோது, குமுதவல்லியோ அவள் கணவரோ இல்லை, நயனி மட்டும்தான் இருந்தான்.

 நயனியைப் பார்த்ததும், அவனை கட்டியணைத்து, அட்வகேட் அரவாமுதன், " நயனி! நீயும் உன் அக்கா ஐந்துபேரும் கோடீஸ்வரனாகி விட்டீர்கள். உங்க ஆறு பேருக்கும் அந்தப் பணத்தை சம பங்காகப் பிரித்துக் கொடுப்பார்கள். உன் பங்குக்கு நாலு கோடிக்கு மேல் வரும். சந்தோஷந்தானே? சரி, லேட்டாகிறது, நான் வரேன். உங்க அக்கா வந்தவுடனே, தகவலை சொல்லி, என்னை உடனே வந்து பார்க்கச் சொல்லு!" எனக் கூறிவிட்டுப் போய்விட்டார்.

 குமுதவல்லியும் அவள் கணவனும் கோவிலுக்குப் போய்விட்டு விபூதி பிரசாதங்களுடன் வீடு திரும்பியபோதுதான், நயனி அவளிடம் அப்படி உறவை முறித்துக்கொள்கிற மாதிரி பேசினான்.

 பேசியதோடு, அட்வகேட் தெரிவித்த செய்தியை நயனி கூறிவிட்டு வெளியே போய்விட்டான்.

 குமுதவல்லிக்கும் அவள் கணவனுக்கும் நயனியின் போக்கில் இப்படி ஒரு திடீர் திருப்பம் ஏன் வந்தது எனத் தெரியாமல் புலம்பி துவண்டனர்.

 போன் வந்தது, அட்வகேட் அரவாமுதனிடமிருந்து!

 அவர் விளக்கமாக, இருபத்தைந்து கோடி ரூபாய் அவர்களுக்கு கிடைக்கப் போவதை தெரிவித்தார்!

 குமுதவல்லிக்கு அந்தச் செய்தி எதிர்பார்த்த மகிழ்ச்சியை தரவில்லை, நயனி இப்படி உறவை முறித்துக்கொண்டு போய்விட்டானே என்ற துயரமே வாட்டியது!

 கணவன் வற்புறுத்தவே, உடனே அவருடன் குமுதவல்லி, அட்வகேட்டை பார்க்கப் புறப்பட்டாள்.

 நடுவழியில் நயனி எதிர்ப்பட்டான். இருவரும் அவனை சைகைமூலம் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போய்விட்டான்.

 குமுதவல்லிக்கு குழப்பம் அதிகமாகியது. தான் ஒன்றும் தவறு செய்யவில்லையே, தம்பி நயனி ஏன் அப்படி பேசினான் என வெதும்பினாள்.

 அதற்கும் மேலே ஓங்கி அடி விழுந்தது, அட்வகேட் ஆபீஸில்!

 " ஏம்மா! உங்க தம்பி நயனிக்கு என்ன ஆச்சு? இந்தக் கடிதம் எழுதி கையெழுத்துப் போட்டு கொடுத்துவிட்டு போய்விட்டான்.

 அந்தக் கடிதம் தந்ததோ, மரண அடி!

 " நான் சபேசன்-சுகுணாவின் மகனல்ல; அதனால் தீர்ப்பின்படி வழங்கப்படும் நஷ்ட ஈடுத் தொகையில் எனக்கு பங்கு பெற தகுதியில்லை; மற்ற ஐந்து பேருக்கு முழுத் தொகையையும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.