(Reading time: 10 - 20 minutes)

வழங்குவதிலே எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை!"

 குமுதவல்லியை தேற்றி வீட்டுக்கு அழைத்துவர அவள் கணவன் மிகுந்த கஷ்டப்பட்டார்.

 வீட்டுக்குள் நுழைந்ததுமே, நயனியை பார்த்ததும், அவன் சட்டையைப் பிடித்து நிறுத்தி, கன்னத்தில் ஓங்கியறைந்து குமுதவல்லி கேட்டாள்.

 " நான் உனக்கு என்ன துரோகம்டா செய்தேன்? எனக்கேன்டா இந்த தண்டனை கொடுத்தே? சொல்லுடா!"

 " அம்மா! நான் உனக்கு தண்டனை தரலே, நீதான் எனக்கு தண்டனை தர முயற்சி செய்தே! நான் சமயத்திலே விழித்துக்கொண்டு தப்பித்தேன்......"

 " என்னடா உளர்றே?"

 " என்னை நீங்க ரெண்டுபேரும் மகனாக வளர்த்தீங்களே தவிர, மனசுக்குள்ளே என்னை உங்க தம்பியாகவே தொடர்ந்து நினைத்துத்தானே, கோடிக்கணக்கிலே பணம் வருதுன்னு உடனே ஆறு பங்கா போடச் சொன்னீங்க, அட்வகேட்டை! அதைத்தான் நான் தனியா கடிதம் எழுதிக் கொடுத்து உடைத்தேன்."

 " புரியும்படியா சொல்லுடா! எனக்குப் பணமா, பாசமாங்குற பரீட்சை வைத்தீங்க! எனக்கு எங்கம்மாதான் வேணும், பணமில்லேன்னு முடிவு எடுத்தேன். அம்மா! திரும்பவும் சொல்றேன், நீ என் அக்காவும் இல்லை, நான் உன் தம்பியும் இல்லை!

 நீ என் அம்மா! நான் உன் மகன்! பணத்துக்காக, நான் உன்னை, என் அம்மாவாகப் பார்க்கிற பாசத்தை, விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை!"

 குமுதவல்லியும் அவள் கணவனும் எதிரில் நின்றிருந்தது, நயனியாகப் பார்க்கவில்லை, தாய்ப்பாசத்தை மதிக்கத் தெரிந்த உத்தம புத்திரனாகத் தெரிந்தான்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.