(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

”அவன் கொண்டாடற பண்டிகையெல்லாம் நமக்கு எதுக்கு”

  

”சும்மாதான்ங்க”

  

”எல்லாம் எனக்குத் தெரியும் உன் புள்ளை வரான், அவனுக்காக இதையெல்லாம் செய்றியா”

  

என காட்டமாக பேச உடனே கமலா கண்கள் கலங்கியபடியே பேசினார்

  

”ஆமா இத்தனை வருஷமா நான் என்னத்த சுகம் கண்டேன், உங்களை கட்டிக்கிட்டு வந்த நாள்ல இருந்து எனக்கு இது வேணும் அது வேணும்னு என்னிக்காவது நான் கேட்டிருப்பேனா, நீங்க கொடுக்கறதை வாங்கிப்பேன், வாய் திறந்து கூட பேச மாட்டேனே ஆனா, இப்ப எனக்கு என் புள்ளை வேணும்னு நினைக்கிறேன் ஆனா, அதுக்கு நீங்க ஒத்துக்க மாட்டீங்க, எப்பவும் உங்களோட பிடிவாதம்தான் ஜெயிக்குது, நீங்க நினைச்சதுதான் நடக்கனும், எல்லாம் என் தலையெழுத்து, புள்ளையை செல்லமா வளர்த்தா மட்டும் போதாது,

  

அவனுக்கு பிடிச்சதை செய்றப்ப தடுக்காம அதை ஏத்துக்கனும், அவனுக்கு பிடிச்ச மாதிரி எல்லாத்தையும் அமைச்சிக் கொடுத்துட்டு கல்யாண வாழ்க்கையை மட்டும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கனும்னு ஆசைப்பட்டா எப்படிங்க, அவன்தானே கடைசி வரைக்கும் வாழப்போறான், நீங்களா வாழப்போறீங்க, அப்ப அவனுக்கு யாரை பிடிச்சிருக்கோ அவங்க கூடதானே வாழனும்னு ஆசைப்படுவான், நீங்க மட்டும் என்னவாம் கமலாதான் வேணும்னு ஒத்தக்கால்ல நின்னு என்னை கட்டிக்கிட்டீங்களே, உங்க அப்பா என்னை ஒத்துக்கலை, அப்புறம் என்னாச்சி கல்யாணம் ஆச்சி உங்க சந்தோஷத்துக்காக உங்கப்பா மாறினாரு, அதை மறந்துடாதீங்க உங்க அப்பாவுக்கு இருக்கற நல்ல மனசு கூட அவர் புள்ளை உங்களுக்கு இல்லையே”

  

”ஏய் எதுக்கு இப்ப கூப்பாடு போடற, இப்ப என்னத்த நான் குறை வைச்சேன் உனக்குச் சொல்லு”

  

”ஏன் பார்த்தா தெரியலையா”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.