”சரி சரி இப்ப என்ன உன் புள்ளை வரான் அதானே, என்னவோ பெரிசா அலட்டிக்கற, பலகாரத்தை செய், நான் ஒண்ணும் சொல்லி வைக்கலை தேவையில்லாம என் அப்பனை இதுல இழுக்காத”
”ஆமா ஒண்ணு சொல்லிடக்கூடாது உடனே ரோசம் வந்துடுமே, அவர் மட்டும் இருந்திருந்தா என் புள்ளை கல்யாணத்தை அவர் ஒத்துக்கிட்டு இருப்பாரு தெரிஞ்சிக்குங்க”
”ஆமாம் ஒத்துக்குவாரு ஒத்துக்குவாரு, எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத நான் வெளிய போய் வரேன்”
“எங்க போறீங்க”“
”எல்லாம் சொல்லனுமாக்கும்”
”ம்க்கும் சொன்னா சமைச்சி வைப்பேன்ல“
”நான் என் அப்பனை பார்த்துட்டு வரேன்” என சொல்லிவிட்டு விறுவிறுவென சொல்லிவிட்டு செல்ல கமலாவோ வியந்தார்
”புத்தி கெட்ட மனுஷன், புள்ளைக்காக பலகாரம் செய்றேன் அதை பார்த்துட்டு சுடுகாட்டுக்கு போறேன்னு போறாரே, இந்தாளை நான் கட்டிக்கிட்டதுக்கு” என புலம்ப அதைக் கேட்டபடி மீண்டும் வீட்டிற்குள் வந்தார் கதிரேசன்
”ஆஆஆ சொல்லு எதுக்கு அலுத்துக்கற”” என கேட்க வாயடைத்துப் போனார் கமலா. வந்தவர் கமலா செய்திருந்த பலகாரங்களில் சிலவற்றை தூக்குவாளியில் எடுத்துக் கொண்டு கிளம்பினார்
”பலகாரத்தை எடுத்துட்டு எங்கிட்டு போறாரு, பித்து பிடிச்சிருக்கு இவருக்கு” என சொல்லிக் கொண்டே தொடர்ந்து பலகாரத்தை செய்யலானார்.