(Reading time: 26 - 51 minutes)
சிறுகதை - சாரங்க் - அசிந்த்ய குமார் சென் குப்தா (சு.கிருஷ்ணமூர்த்தி)

யொண்ணும் அவசியமில்லே எனக்கு! இருக்கறதுன்னா இருக்கட்டும், இல்லேன்னா கீழே எறக்கி விட்டுடுவேன், ஏய் டிக்கெட் இருக்கா?"

  

"இல்லீங்க. எனக்குச் சம்பளம் வேணாம்!"

  

படகில் இடம் கிடைத்ததே பெரிய காரியம் நசீமக்கு. அப்பன் இல்லே, சித்தப்பன் இல்லே, முதலாளி இல்லே, யாரோ ஒரு வேத்து மனிதன் கிட்டே அடி வாங்கிக் கிடடு வாயை மூடிக் கிட்டு இருக்கறதை விட எவ்வளவோ தேவலை இது. முற்றிலும் புதிய அனுபவம் கிடைக்கிறதே, அதுவே ஒரு சுகந்தான்.

  

நன்றாக வேலை செய்தால் ஒருநாள் படகிலேயே நிரந்தரமாக வேலை கிடைத்து விடும். முதலில் படிக்கட்டை ஏற்றி இறக்கும் வேலை, பிறகு மேல் தட்டுப் பொறுப்பு, அதற்குப் பிறகு பட கோட்டும் வேலை, கடைசியில் சாரங்க்! இப்படி நடக்காதென்று யார் சொல்ல முடியும்? முதலில் சம்பளமில்லாத வேலைக்காரன், கடைசியில் படகுக்கே தலைவன்!

  

சாரங்க் அடர்த்தி குறைந்த தன் வெண்தாடியை உருவி விட்டுக்கொண்டான்.

  

ஆனால் முதல் நாளிரவே நசீமுக்கு நல்ல உதை கிடைத்தது சாரங்கிடம். அவன் கவனக்குறைவாக ஒரு கண்ணாடி ஜாடியை உடைத்துவிட்டான். பிறகு அவ்வளவு தான்! அவன் எதிர்பாராத விதமாக அவன் முகத்தில், தலையில், முதுகில் பளார் பளார் என்று அடிகள் விழுந்தவண்ணம் இருந்தன. ஹோவென்று அழுதுவிட்டான் நசீம். ஆனால் அவன் கை கால்களைக் கட்டி ஆற்றின் கறுப்புத் தண்ணீரில் அவனை எறிந்து விடுவான்.

  

🌼🌸❀✿🌷

  

நசீமுக்கு வருத்தத்தை விட ஆச்சரியந்தான் அதிகம் ஏற்பட்டது. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்தப் படகு வாழ்க்கையில் இதுதான் வழக்கம். எல்லாரும் சாரங்கிடம் அடி வாங்கத் தான் வேண்டும். படிக்கட்டு இறக்கி ஏற்றுபவர்கள், மேல் தட்டைக் கழுவுபவர்கள், சமையல் பணியாளர், கயிறு இழுப்பவர்கள், விளக்குக் காட்டுபவர்கள் இவர்களுடைய வேலை யில் ஒரு சிறிய தவறு நேர்ந்தாலும் அவர்களுக்கு அடி உதை தான்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.