(Reading time: 26 - 51 minutes)
சிறுகதை - சாரங்க் - அசிந்த்ய குமார் சென் குப்தா (சு.கிருஷ்ணமூர்த்தி)

  

குற்றம் யாருடையது?

  

மாலுமியின் குற்றம், இரண்டாவது, 'மேட்'டின் குற்றம். ஆனால் இவர்கள் கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவர்கள். இவர்களை அடிப்பது சுகமில்லை, அடிப்பவனுக்குத்தான் கை கால் புண்ணாகும். ஆனாலும் இவர்கள் தப்ப முடியாது. இவர்களுடைய சம்பளம் முழுவதும் பறிமுதலாகி விடும். இவர்கள் தங்கள் சாப்பாட்டைக் கூடக் காசு கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

  

சாரங்க் படகை நிரந்தரமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவன் மாதிரி. படகுக்கான தளவாடச் செலவுகள், கரிக்கான செலவு, ஊழியர்களின் சம்பளம் இவற்றையெல்லாம் கணக்கிட்டு ஒரு மொத்தத் தொகையைக் கம்பெனி சாரங்கிடம் கொடுத்துவிடும். அதைக்கொண்டு சம்பளப் பட்டுவாடாவும் மற்ற செலகளும் செய்துகொள்வான் சாரங்க். அவன் தன்னிஷ்டத்துக்கு சம்பளம் கொடுப்பான், அபராதம் விதிப்பான், சாப்பாட்டை நிறுத்துவான்; தன்னிஷ்டத்துக்கு ஆட்களை வேலையை விட்டு நீக்குவான். அவனுக்கெதிராக எந்தப் புகாரும் எடுபடாது, அப்பீலும் இல்லை. படகின் உள்துறை நிர்வாகத்தைப் பற்றிக் கம்பெனிக்குக் கவலையில்லை. படகு, ஆட்களையும் சரக்குகளையும் ஏற்றிக்கொண்டு போகவேண்டும், கணிசமான தொகை லாபம் காட்ட வேண்டும் என்பதில்தான் அதற்கு அக்கறை.

  

ஆகையால் படகு ஊழியர்களுக்கு சாரங்கின் வார்த்தை தான் வேதவாக்கு. அவர்கள் அவனுடைய அடிமைகள். அவன் வெறும் சாரங்க் அல்ல, பெரிய வைசிராய்.

  

🌼🌸❀✿🌷

  

"அழுது பிரயோசனமில்லேப்பா," பக்கத்திலிருந்த மக்பூல் சொன்னான். "இது மாதிரி இன்னும் எவ்வளவோ அடி வாங்க வேண்டியிருக்கும். அடி வாங்கி வாங்கித் தான் வேலை உயர்வு கிடைக்கும்."

  

மக்பூலும் முதலில் வேலைக்காரனாகத் தான் படகில் சேர்ந்தான். சமையல் வேலையல்ல; துணிச்சலவை, செருப்புத் தைக்கும் வேலை. மூன்றாண்டுகளுக்குப் பிறகு அவனுக்குப்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.