இந்த அப்புறம் ‘எப்புறம்’ என்பது இன்று வரை அவளுக்கு புரியாத புதிர்! இது கிட்டத்தட்ட தினமும் நடக்கும் நிகழ்வு தான்... ஒன்றிரண்டு நாட்கள் என்றில்லாமல் அவள் திருமணமாகி இந்த வீட்டிற்கு வந்த நான்கு வருடங்களாகவே நடப்பது தான்...
❀✿❀✿❀✿
மற்ற பெண்களை போலவே திருமண வாழ்வு பற்றி சௌம்யாவிற்கும் பல கனவுகள் இருந்தது... இயல்பாகவே இனிய குணம் உள்ளவள் என்பதால் மட்டுமல்லாமல் ஒரு நடுத்தர குடும்பத்தில் மூத்த மகளாக பிறந்திருந்ததாலும், பொறுப்பும், விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவமும் அவளுக்கு இருந்தது...
சௌம்யாவின் அம்மா நித்யாவும், அனிருத்தின் அம்மா பத்மினியும் கல்லூரி தோழிகள். பல வருடங்கள் கழித்து எதிர்பாராமல் தோழிகளுக்கிடையில் நேர்ந்த சந்திப்பு அவர்களின் நட்பை புதிப்பித்ததோடு மட்டுமல்லாமல் அனிருத் சௌம்யாவின் திருமணத்தையும் நடத்த காரணமாக இருந்தது.
ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனை மேலாளராக இருந்த அனிருத்திற்கு முதல், இரண்டாம், மூன்றாம் மனைவி எல்லாம் அவனின் வேலை தான்... அவனுடைய அயராத உழைப்பினால். திறமையினால் இளம் வயதிலேயே மேலாளர் பதவியை பெற்றிருந்தான் அவன்...
திருமணமான சில நாட்களிலேயே சௌம்யாவிற்கு அனிருத்தின் குணநலன்கள் புரிந்து போனது... இன்றைய கால இளம்பெண்களை போலவே சௌம்யாவிற்கும் மனதில் பலவிதமான ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் இருக்க தான் செய்தன... ஆனால் பத்மினியின் வாயிலாக அனிருத்தின் மனதை அறிந்துக் கொண்டாள்...
அனிருத்தின் பெற்றோர் அரசு பணியாளர்களாக இருந்தவர்கள் ஆனால் அவர்களின் சகோதர சகோதரிகள் சற்றே பணம் படைத்தவர்களாக இருந்தனர். பணவசதியின் அடிப்படையில் பலமுறை அவனுடைய வயதை ஒத்த பெரியப்பா சித்தப்பா பிள்ளைகளினால் கிண்டலுக்கு