மருந்து வைத்து மட்டும் சரி படுத்தும் physical பிரச்சனை இல்லை... கொஞ்சம் psychologicalஆகவும் அட்டென்ட் செய்யனும்... உங்களுக்கு நேரம் இருக்கும் போது அவங்களுக்கு பிடிச்ச விஷயத்தை பற்றி பேசி பாருங்க... ஐ நோ திஸ் மைட் சவுன்ட் இன்-டிப்பரன்ட் பட் ட்ரஸ்ட் மீ... இட் ஹெல்ப்ஸ்...”
அவளுக்கு பிடித்ததாக அவன் எதை பேசுவது?
“இன்னைக்கு நம்ம கல்யாண நாள், கோவிலுக்கு போயிட்டு, வெளியே எங்கேயாவது போவோமா?”
“நோ சான்ஸ்... எனக்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு, இன்பாக்ட் நான் வர லேட்டாகும்... அடுத்த அன்னிவேர்சரி செலிபிரேட் செய்வோம்...”
“இன்னைக்கு என்னோட பிறந்த நாள் நீங்க கிப்ட் எதுவும் தரவே இல்லை... விஷ் செய்ய கூட இல்லை...”
“ப்ளீஸ் சௌமி என்னை இது போல் எல்லாம் தொந்தரவு செய்யாதே... உன்னிடமே கிரெடிட் கார்ட் இருக்கு தானே? உனக்கு பிடித்ததாக எதை வேண்டுமென்றாலும் வாங்கிக்கோ... டோன்ட் வரி அபவுட் தி ப்ரைஸ் டேக்...”
இது எல்லாம் திருமணமான முதல் வருடத்தில் நடந்தது தான்... அதன் பின் அவள் அவனிடம் இதை பற்றி எல்லாம் பேசியதில்லை...
“இன்னைக்கு நம்ம அன்னிவேர்சரி... நீங்க பிஸின்னு தெரியும் நானே கோவில் போயிட்டு வந்தேன்...”
சொல்லிவிட்டு அவன் நெற்றியில் விபுதி இட்டு விடுவாள்...
“ஹேப்பி பர்த்டே... உங்களுக்காக நான் வாங்கிட்டு வந்தேன்...”
அவனுக்கு வசதியாக இருக்க என்று அவள் வாங்கி தந்த நாய்ஸ் கேன்சலிங் ஹெட்செட்டை