(Reading time: 15 - 30 minutes)
சிறுகதை - என் சுவாசக் காற்றே! - பிந்து வினோத்
சிறுகதை - என் சுவாசக் காற்றே! - பிந்து வினோத்

   

❀✿❀✿❀✿

   

மூன்று மாதங்களுக்கு பிறகு அவள் வீடு திரும்பவும், பத்மினி ஆரத்தி எடுத்து மருமகளை வீட்டினுள் அழைத்து சென்றாள்... 

   

வீட்டினரின் பேச்சில் நேரம் நத்தையாக நகர்ந்தது... 

   

பல மாதங்களாக பிரிந்திருந்த அம்மாவை மீண்டும் வீட்டில் பார்த்த சந்தோஷத்தில் ஸ்ரேயா அவளிடம் செல்லம் கொஞ்சி, விளையாடி, இத்தனை நாள் சொல்லாமல் விட்ட கதைகளை எல்லாம் பேசி முடித்து ஒரு வழியாக தூங்கவும், அனிருத் மனைவியின் அருகில் வந்தான்...

   

சௌம்யாவின் முகத்தில் மீண்டும் சிறிய தடுமாற்றம் இருந்தது...

   

அனிருத் புரியாமல் குழம்பி, என்ன என கண்களால் கேள்வி கேட்டான்...

   

“சாரி...” என்றாள் சௌம்யா தயக்கத்துடன்.

   

இப்போதும் எதுவும் புரியாமல் அவளருகில் அமர்ந்தவன்,

   

“எதுக்கு, இந்த சாரி?” என்று பதில் கேள்வி கேட்டான்.

   

“இல்லை உங்க புது ப்ராடக்ட் லாஞ்ச் விஷயமா பிசியா இருந்தீங்க அப்போ போய் இப்படி ஆச்சே... உங்களுக்கு ஒரு நல்ல ஆப்பர்ச்யுனிட்டி மிஸ் ஆகிடுச்சே... சாரி... நான் பார்த்து தான் ரோட் க்ராஸ் செய்தேன்... ஆனால்...”

   

அவளின் எலும்புகள் அனைத்தும் நொறுங்கி போவது போல் அனிருத் அணைத்த இறுகிய அணைப்பில் பேச மறந்து திகைத்து பேச்சை நிறுத்தினாள் சௌம்யா...

   

“நான் உன்னிடம் மன்னிப்பு கேட்க கூட தகுதி இல்லாதவன், நீ...” பேச முடியாமல் உணர்ச்சி 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.