(Reading time: 15 - 30 minutes)
சிறுகதை - என் சுவாசக் காற்றே! - பிந்து வினோத்
சிறுகதை - என் சுவாசக் காற்றே! - பிந்து வினோத்

மனதினுள் பட்டாம்பூச்சிகள் பறக்க, இல்லை எதுவும் இருக்காது என தனக்கு தானே சொல்லிக் கொண்டு அருகில் இருந்த டாக்டரின் அறைக்குள் அவருடன் சென்றான் அனிருத். ஸ்ரீதரும் அவனுடன் சென்றார்.

   

“டாக்டர் என் மனைவிக்கு எப்படி இருக்கு? அவளுக்கு ஒன்னுமில்லையே?”

   

“சாரி சார், உங்களுக்கு உடனே பாசிட்டிவா பதில் சொல்ல முடியலை... விபத்தினால அவங்களுக்கு தலையில் அடி பட்டிருக்கு... நிறைய ரத்தம் போய் இருக்கு... விபத்து நடந்த உடனேயே அவங்களுக்கு நினைவு தப்பி இருக்கு... இன்னும் அவங்களுக்கு நினைவு திரும்பலை...”

   

“டாக்டர்!”

   

“சாரி... இன்னும் அபாயகரமான நிலைமையில் தான் இருக்காங்க...”

   

“ப்ளீஸ் டாக்டர் ஏதாவது செய்ங்க... எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை...”

   

“இல்லை... திஸ் இஸ் நாட் அபவுட் மனி... அவங்க நினைவு திரும்பாமல் கோமாவிற்கு போக நிறைய சான்ஸ் இருக்கு... எங்களால் முடிந்த வரை நாங்க முயற்சி செய்தாச்சு... இனி காத்திருப்பது தவிர வேற வழி இல்லை....”

   

“என்ன சொல்றீங்க டாக்டர்...”

   

“ஐ ஆம் டெரிபளி சாரி... கோமா ஸ்டேஜுக்கு போனால் திரும்ப எப்போது நினைவு வரும்னு சொல்ல முடியாது... நினைவே வராமல் கூட போகலாம்... இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல முடியாது... கடவுளை வேண்டிக்கோங்க...”

   

❀✿❀✿❀✿

   

டாக்டரின் அறையை விட்டு எப்படி வெளியே வந்தான் என்பதே அவனுக்கு புரியவில்லை... 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.