மூண்டது... எடுத்து பேசாமல் கைப்பேசியை அமைதியாக்கி தன் வேலையை தொடர்ந்தான்...
மீண்டும் ஆறு மணி அளவில் சௌம்யா அழைத்தாள்... அவசரமாக எடுத்து அவனால் கோவிலுக்கு அவளுடன் வர இயலாது என்பதை சொல்லி விட்டு தன் வேலை தொடர்ந்தான்...
எப்போதும் அவன் செய்வது தான் என்பதால் அவன் மனதில் இதனால் குற்ற உணர்ச்சி ஏதும் தோன்றவில்லை...
ஆனால் மற்ற நாட்களை போல் இல்லாமல் ஒரு மணி நேரத்திலேயே அவனின் கைப்பேசிக்கு மீண்டும் சௌம்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது...
வேலையில் ஏற்படும் தொந்தரவினால் அனிருத்தின் மனதில் கோபம் மூண்டது... கைப்பேசியை எடுத்து ஸ்விட்ச்-ஆப் செய்து வைத்தான்...
❀✿❀✿❀✿
தொடர்ந்து இரண்டு மணி நேரங்கள் வேலை செய்தவனின் கவனத்தை இம்முறை தொலைபேசி கலைத்தது...
“ஹலோ அனிருத் ஹியர்...”
“அனிருத் நான் அப்பா பேசுறேன்... சௌமியாவிற்கு அக்சிடென்ட் ஆகிடுச்சு... பி.ஆர் ஹாஸ்பிடலுக்கு உடனே வாப்பா...”
தந்தை ஸ்ரீதரின் பேச்சு அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது...
ஒரே ஒரு கணம் அவன் டைப் செய்துக் கொண்டிருந்த விற்பனை திட்டம் மனதில் வந்தது... ஆனால் உடனேயே தந்தை சொன்ன விஷயத்தின் தீவிரம் புரியவும்,
“என்னப்பா, என்ன ஆச்சு?” என்றான் கவலையுடன்...