வந்த உடனேயே அவர்கள் இருவரையும் மற்றவர்கள் சூழ்ந்துக் கொண்டனர்...
ஸ்ரீதர் மற்றவர்களிடம் டாக்டர் சொன்னதை பகிர்ந்துக் கொள்ள அனிருத் மீண்டும் நாற்காலியில் அமர்ந்தான்...
காலையில் எப்போதும் போல் புன்னகையுடன் சௌம்யா அவனிடம் பேசியது நினைவில் வந்தது...
“அப்புறம்...”
என்று ஏதோ சொல்ல தொடங்கவும், அதை கேட்க பொறுமை இல்லாதவனாக,
“எதுவா இருந்தாலும் அப்புறம் கேட்கிறேன், எனக்கு இன்னும் அஞ்சு நிமிஷத்தில் ஒரு கால் இருக்கு... டிரைவ் செய்துட்டே நான் அட்டென்ட் செய்யனும்...”
அவள் என்ன சொல்ல வந்தாள்? கேட்டு தெரிந்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்காமலே போய் விடுமா?
அவனின் மனம் நான்கு வருடங்களாக அவன் அருகிலேயே புன்னகை மாறாமல் வாசம் வீசிக் கொண்டிருந்த அந்த அழகு தேவதையை நினைத்து உருகியது...
திருமணமான முதல் சில மாதங்கள் தவிர அவன் அவளிடம் அன்பாக பேசியது கூட இல்லை...
❀✿❀✿❀✿
சௌம்யாவிற்கு விபத்து நடந்து ஒரு வாரமாகி இருந்தது... டாக்டர் பயந்தது போலவே அவள் கோமாவினுள் சென்றிருந்தாள்... அனிருத் பித்து பிடித்தது போல் இருந்தான்...
“கோமாவில் இருந்து வெளியே வர தனியா ட்ரீட்மென்ட் என்று இல்லை அனிருத்... இது