(Reading time: 15 - 30 minutes)
சிறுகதை - என் சுவாசக் காற்றே! - பிந்து வினோத்
சிறுகதை - என் சுவாசக் காற்றே! - பிந்து வினோத்

ஆளாகி இருந்த அனிருத்திற்கு வாழ்க்கையில் பெரிய நிலையை அடைய வேண்டும் என்ற வெறி ஏற்பட்டிருந்தது... வேலையில் சாதித்து உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று அவன் விரும்பினான்... அதற்காகவே அயராது உழைத்தான்...

   

இந்த விபரங்கள் தெரிந்த பின், மனதை தேற்றிக் கொண்டு, கணவனுக்கு உறுதுணையாக இருக்கும் ஒரு நல்ல மனைவியாக, வீட்டிற்கு ஒரு நல்ல மருமகளாக நடந்துக் கொண்டாள் சௌம்யா... 

   

கணவன் தன்னைக் கண்டுக்கொள்ளாமல் இருப்பது மனதை வருத்திய போதும், சௌம்யா நச்சரிக்கும் மனைவியாக மாறவில்லை... திருமணமான முதலாம் ஆண்டிலேயே பிறந்த அவர்களின் குழந்தை ஸ்ரேயாவிடம் தன் மொத்த அன்பையும் பாசத்தையும் கொட்டி வளர்த்தாள்...

   

எப்போதும் நிறுவனத்தின் விற்பனையை பெருக்குவதை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் அனிருத்தின் அதிர்ஷ்டம் சௌம்யா அவனின் மனைவியானது... 

   

ஆனால், நல்ல மனைவியாக, மருமகளாக, அன்னையாக இருந்த சௌம்யாவின் பொறுமையும், அன்பும் இன்னமும் அனிருத்தின் கவனத்தை ஈர்த்ததாக தான் தெரியவில்லை!

   

❀✿❀✿❀✿

   

அன்று முழுதினமும் அனிருத்திற்கு வேலை இருந்தது. அவனின் நிறுவனம் விரைவில் அறிமுகப் படுத்த இருந்த புதிய கருவிக்கு விற்பனை யுத்தி (marketing strategy) திட்டமிட வேண்டி இருந்தது. அவனின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த தென்னிந்தியாவிற்கான அவர்களின் நிறுவனத் தலைவர் சோமசுந்தரம் அந்த முழு பொறுப்பையும் அவனிடம் அளித்திருந்தார். இந்த அவனின் முயற்சி மட்டும் வெற்றி பெற்றால் அவன் எளிதாக இன்னும் சில படிகள் நிறுவனத்தில் உயரலாம்...

   

எப்போதும் போல் கவனம் சிதறாமல் சுறுசுறுப்பாக வேலையை தொடர்ந்துக் கொண்டிருந்தவன், அவனின் தனிப்பட்ட கைப்பேசியின் ஓசைக் கேட்டு அவசரமாக அதை எடுத்து பார்த்தான். அதில் மின்னிய சௌம்யாவின் பெயரை பார்த்து மனதினுள் எரிச்சல் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.