பார்த்து அவனுக்கு மனம் வருந்தியது... அவளின் பிறந்த நாள் தேதி கூட அவனுக்கு நினைவில் இல்லை...
எத்தனை எத்தனை இனிய நேரங்களை தவற விட்டு விட்டான்...
❀✿❀✿❀✿
ஒரு முடிவு எடுத்தவனாக, சோமசுந்தரத்தை நேரில் சந்தித்து தன் நிலையை விளக்கி, அதுவரை அவன் முடித்திருந்த டாகுமேன்ட்டுகளை கொடுத்து விட்டு சௌம்யாவின் அருகிலேயே இருந்தான்... ஏதேதோ பேசினான்...
அவனுக்காக என்று அவள் காத்திருந்தபோது ஒரு சில வினாடிகள் கூட ஒதுக்க முடியாதவன், இன்று பசி தூக்கம் அனைத்தையும் மறந்து மனைவியின் அருகிலேயே தவம் இருந்தான்... அவளை மீட்டுக் கொடுக்க சொல்லி கடவுளிடம் மன்றாடினான்...
அவனின் வேண்டுதலினால் தானோ, இல்லை அவளின் உயிர் கணவனின் குரலை கேட்டு தானோ, இல்லை மருத்துவரின் மருந்தினாலோ, சௌம்யா கோமாவில் இருந்து வெளியே வந்தாள்...
சிறு குழந்தை போல் களங்கமில்லாமல் அவள் கண்களை தட்டி பார்த்த போது, அனிருத் மெய் சிலிர்த்து போனான்...
❀✿❀✿❀✿
அதன் பின் சௌம்யாவை பத்மினியும், நித்யாவும் கவனித்துக் கொண்டனர்.
மீண்டும் வேலைக்கு செல்ல தொடங்கியவன், மறக்காது தினமும் மதிய உணவு வேளையில் மனைவியுடன் பேசுவான்... மாலையில் அவளை மருத்துவமனையில் சென்று சந்திப்பான்... ஆனாலும் சௌம்யாவிடம் ஏதோ தயக்கம் இருப்பதாக அவனுக்கு தோன்றியது... எப்போதும் அவளருகில் அவர்கள் இருவரின் அன்னை ஒருவர் இருக்கவே நேராக கேட்க இயலாமல் தடுமாறிக் கொண்டிருந்தவன், சௌம்யா வீடு திரும்ப காத்திருந்தான்...