என் லைப்பையே கோட்டை விட்ருப்பேன்... உன்னை ஹாஸ்பிட்டலில் பார்த்தப் போது எப்படி இருந்திச்சு தெரியுமா? டாக்டர் நீ அபாயக் கட்டத்தை தாண்டியதாக கூட சொல்லலை... ஒவ்வொரு நாளும் சித்ரவதை தான்... நாலு வருஷமா நீ மனசுக்குள் வருத்தப்பட்டதற்கு கடவுள் எனக்கு ஆறு மாசத்தில் மொத்தமா தண்டனை கொடுத்திட்டார்...”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை...”
“அப்புறம் ஏன் ரோட் க்ராஸ் செய்ததை பத்தி சொல்லி சாரி சொன்ன?”
“அது அப்படி இல்லைங்க.. ப்ளீஸ் நான் சொல்றதை கேளுங்க...”
“ரொம்ப பயந்துட்டேன்டா... நீ இல்லாமல் நான் எம்.டி ஆகி கூட என்ன கிடைக்க போகுது? நீ அன்னைக்கு சொல்ல வந்ததை கூட நான் கேட்கலை... நான் ஒரு ஸ்டுபிட்...”
“ப்ச்... போதும், உங்களுக்கு வேலை மீது ஈடுபாடு அதிகம் எனக்கு அது புரியாதா என்ன? ஆனால், எப்போ எதை சொல்ல வந்தேன்?”
“அன்னைக்கு அக்சிடென்ட் ஆன காலையில நான் கிளம்பின போது ஏதோ சொல்ல வந்தீயே...”
அமைதியாக யோசனையில் ஆழ்ந்த சௌம்யா,
“ஓ! அதுவா பெரிசா எதுவுமில்லை....” என்றாள்.
“?”
“நீங்க அன்னைக்கு போட்டிருந்த ஸ்கை ப்ளூ கலர் ஷர்ட் உங்களுக்கு நல்லா இருந்தது அதை தான் சொல்ல வந்தேன்...”
“நான் ஸ்மார்ட்டா இருப்பது உனக்கு சின்ன விஷயமா?”
மனைவியை சீண்ட வேண்டுமென்றே கேட்டான் அனிருத்... கணவனின் சீண்டல் புரிந்த