போதும், அவன் மனம் வருந்தி விட கூடாது என்று விளக்கம் அளித்தாள் சௌம்யா.
“ப்ச்... அப்படி இல்லைங்க... நீங்க ரொம்ப பீல் செய்து சொன்னீங்களே அதனால தான் சொன்னேன்... ஆனால் உங்களுக்கு இப்படி எல்லாம் கூட பேச தெரியுமா?”
“இவ்வளவு என்ன இதை விட அதிகமா கூட பேசுவேன்... சும்மாவா நான் மார்க்கெட்டிங் மேனேஜரா இருப்பது?”
“ம்ம்ம்... ஆனாலும் நல்ல வாய்ப்பு மிஸ் ஆகிடுச்சு...”
“ஒன்னும் மிஸ் ஆகலைங்க மேடம்... சோமசுந்தரம் சார் நான் எழுபத்தி சதவிதம் முடித்து வைத்திருந்த பிளானே நல்லா இருக்குன்னு சொல்லி அதையே தான் இம்ப்ளிமென்ட் செய்ய முடிவு செய்திருக்கார்...”
“ஓ!”
“இனிமேலாவது ஒழுங்கா வேலையையும் வீட்டையும் பேலன்ஸ் செய்ன்னு எனக்கு அட்வைஸ் வேற கொடுத்திருக்கார்...”
“ம்ம்ம்... அது சரி...”
“ஹேய்! நான் ஏதோ அதிக நேரம் வேலை செய்வேன் அவ்வளவு தான்... மற்றபடி எல்லாம் நான் ஓகே தான்...”
“அப்படியா என்ன? உங்க பொண்ணு எந்த ஸ்கூலில் படிக்குறான்னு சொல்லுங்க பார்ப்போம்?”
“!@#$%^&*()”
சீண்டல், கோபம், கொஞ்சல் என கணவன் மனைவி இருவரும் தங்களின் மனதில் இருப்பதை பகிர்ந்துக் கொண்டு பேசினர்... நான்கு வருடத்திற்கு முன்பே செய்திருக்க வேண்டியதை