வேகத்தில் தடுமாறினான் அனிருத்.
ஏதோ தோன்ற கணவனின் அணைப்பில் இருந்து விடுபட்டு அவனின் முகத்தை பார்த்தவள், அவன் கண்களில் மின்னிய கண்ணீரை பார்த்து அதிர்ந்து போனாள்...
“என்னங்க இது! ப்ளீஸ்...”
அவளின் இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக்கி தன்னுடைய கைகளினுள் இறுக்கி கொண்டவன்,
“ரொம்ப பயந்துட்டேன் சௌமி... உன்னை நான் ஒரு உயிருள்ள ஜீவனாக கூட மதிச்சதில்லை... ஆனால் இந்த ஒரு சில மாதங்களிலேயே நீ தான் என்னுடைய சுவாச காற்றுன்னு புரிஞ்சுக்கிட்டேன்... எனக்கு வேராக இருந்து நான் நிறைய வெற்றி மலர்களை குவிக்க வைத்தவள் நீ... இதெல்லாம் புரிந்துக் கொள்ளாமல்... நான் ஒரு லூசு... என்னை மன்னிச்சுக்கோடா ப்ளீஸ்...”
“என்னங்க நீங்க என்கிட்டே போய் மன்னிப்பு கேட்டுட்டு...”
“நீ மட்டும் என் கிட்ட கேட்கலாமா? உனக்கு அடிபட்டதை விட உன்னால என்னுடைய கரியர் பாதிக்கப் படும்னு நான் நினைப்பேன்னு தானே நீ நினைச்ச?”
“அச்சோ! அப்படி எல்லாம் எதுவுமில்லை...”
“இல்லை சௌமி, எனக்கே என்னை பற்றி தெரியும்... அக்சிடென்ட் பத்தி அப்பா சொன்ன போது கூட முதலில் ஒரு வினாடி செய்துக் கொண்டிருந்த வேலை பற்றி தான் தோணிச்சு...”
“இதில் தப்பு இல்லையே... செய்யும் வேலையில் இருக்கும் ஈடுபாடு...”
அவள் பேச்சை தொடர விடாது, குறுக்கிட்டவன்,
“போதும் எனக்காக நீ சொல்லும் இந்த சப்பக் கட்டு எல்லாம்... எதையோ அச்சீவ் செய்றேன்னு