(Reading time: 16 - 32 minutes)
சிறுகதை - ஒரு சுமாரான கணவன் - ரெ.கார்த்திகேசு
சிறுகதை - ஒரு சுமாரான கணவன் - ரெ.கார்த்திகேசு

"சுலைமான். எங்க அத்தா கீள சாப்பாட்டுக் கடை வச்சிருக்காரு"

   

"எப்படி வீடு தெரியும்?"

   

"உங்க புருஷன் சொன்னாரு!"

   

"பத்து மாடி ஏறி வந்தியா?"

   

"முடியாதுன்னுதான் சொன்னேன். அப்பறம் அதுக்குன்னு ரெண்டு வெள்ளி தந்தாரு. அப்புறம்தான் சரின்னேன்!" என்றான்.

   

அவள் மகிழ்ந்து சிரித்தாள்.

   

"அப்புறம் மத்தியானத்துக்கு நாசி புங்குஸ் அனுப்பச் சொன்னாரு. வேற எதாச்சும் வேணுமான்னு உங்ககிட்ட கேட்டு வாங்கித் தரச் சொன்னாரு!"

   

என்ன கேட்பதென்று தெரியவில்லை. "இது இப்ப போதும்!"

   

"சரி" என்று அவன் திரும்பினான். "இப்ப லிஃப்டு வேலை செய்யிது" என்று சொல்லியவாறு லிஃப்டை நோக்கி நடந்தான்.

   

அவள் போய் அவசரமாக வாய் கை அலம்பி வந்து ரொட்டிச் சானாய்ப் பொட்டலத்தை ஆசையுடன் அவிழ்த்தாள். அதை அப்படையே வைத்துவிட்டு தேனீரை எடுத்து உறிஞ்சினாள். வெது வெதுப்பான சூட்டுடன் அது தொண்டைக் குழாயில் தேனாய் இறங்கியது.

   

லிஃப்டு வேலை செய்வதால் முதல் வேலையாகக் கீழே போய் ஒரு கூட்டுமாறும் தூள் சவர்க்காரமும் ப்ரஷும் வாளியும் ரப்பர் குழாயும் வாங்கி வரவேண்டும் என்று நினைத்தாள். கழுவி விட்டால் வீடு பளிச்சென்று இருக்கும். புதிய இடமாய் இருந்தால் என்ன? இது என் வீடு. என்ன 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.